Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
Today Rasi Palan 13 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் லாபத்திற்காக தவறான பாதையில் செல்வதை தவிர்க்கணும்
இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். உறவுகளுக்கிடையே மனகசப்பு ஏற்படலாம். நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்வது நல்லது. இன்று உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. உங்கள் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமான நாள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று அதைத் திரும்பப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, கடந்த காலத்தை நினைத்து கவலைப்படாமல், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினால் நல்லது. தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இன்று அலுவலகத்தில், மேலதிகாரி உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளை வழங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும். முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், இன்று அவர்களின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீண்ட நாட்களாக தடைப்பட்டு வேலை இன்று முடிவடைந்து பெரும் நிம்மதி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். வணிகர்களின் பொருளாதாரப் பக்கமும் வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 மணி முதல் காலை 11 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு சிகரெட், மது போன்ற கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவற்றிலிருந்து விரைவில் வெளிவர முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். வேலையில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் சிறிய வேலையை முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். யோசிக்காமல் செலவு செய்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 4:20 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். புதிய வருமானத்தைப் பெறலாம். விரைவில் கடனில் இருந்து விடுபடலாம். அலுவலகத்தில் சக ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டால் பொறுமை காக்க வேண்டும். உங்கள் கோபத்தால் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். வணிகர்கள் இன்று நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதைத் தவிர, எந்த முக்கிய வேலையையும் தவிர்க்கவும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு உடற்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் கிசுகிசுப்பதைத் தவிர்க்கவும். இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட எந்த ஒரு வேலையையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, பழைய நீதிமன்ற விஷயம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். உங்கள் எந்த வேலையையும் அவசரத்திலும் பீதியிலும் செய்வதைத் தவிர்க்கவும். இன்று வணிகர்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும். நிதி இழப்பு ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாருடனான உறவு இன்னும் வலுவாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, தேவைப்படும் ஒருவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்களின் சிறப்பான செயல்பாட்டினால், இன்று உயர் அதிகாரிகளின் மனதை வெல்வீர்கள். இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் பங்குச் சந்தையுடன் தொடர்புடையதாக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பெரிய மாற்றம் தேடி வர போகிறது. மேலும், நீங்கள் சில புதிய உரிமைகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மதிப்புமிக்க பரிசை வழங்க நினைத்தால், இன்று அதற்கு சரியான நாள். உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சவாலாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில காலமாக அலுவலகத்தில் உங்களால் சிறந்ததைக் கொடுக்க முடியவில்லை என்றால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள். ஒரு சிறிய கவனக்குறைவும், உங்கள் கடந்த கால உழைப்பை அழித்துவிடும். வணிகர்கள் அதிக லாபம் ஈட்ட தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசு சார்ந்த விஷயங்களிலும் அலட்சியம் காட்டக்கூடாது. பொருளாதார ரீதியாக, இன்று சாதாரணமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள, உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களின் முக்கியப் பணிகளில் ஏதேனும் தடை இருந்தால், உயர் அதிகாரிகளின் உதவியால் பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றியடைந்தால், உங்கள் நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல்நலம் குறித்து எந்த வித அலட்சியமும் செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை



Click it and Unblock the Notifications











