Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் வேலைகளில் திடீர் தடைகள் மேலோங்கலாம்...

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 10 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 10 February 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 10 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சௌகரியமான விஷயங்களுக்கு கூடுதல் பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். இது தவிர, கடன் வாங்குவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அவசரமாக ஏதேனும் முடிவுகளை எடுத்தால், வரும் நாட்களில் உங்கள் மீதான அழுத்தம் அதிகமாகலாம். அலுவலகத்தில் போட்டி அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் சக ஊழியர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் பணியில் சில தடைகள் வரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் கைகள் அல்லது கால்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வணிகர்கள் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு, இன்று மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். முழு நம்பிக்கையுடன் இருந்தால் நல்லது. நிதி நிலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. திடீர் பெரிய செலவு காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், வரவிருக்கும் தேர்வுக்காக கிடைக்கும் நேரத்தை நன்றாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். டிவி மற்றும் மொபைலில் இருந்து சற்று விலகியே இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகத்தில் உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களின் எந்த வேலையும் உங்கள் மனதிற்கு ஏற்றதாக இல்லை என்றால், கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பின்னர் வருத்தப்படக்கூடிய எதையும் செய்திட வேண்டாம். முன்னோர் வழி தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால், வீட்டு பெரியவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். இன்று நல்ல லாபத்தையும் எதிர்பார்க்கலாம். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று உங்களுக்கு பணத்தின் அடிப்படையில் சிறந்த வாய்ப்பு தேடி வரக்கூடும். கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவுகளை அனுபவித்து உண்ண முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

கடகம்

கடகம்

வேலை விஷயமாக இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அணுகுமுறை சற்று கடுமையாகவே இருக்கும். மேலதிகாரி தரும் பொறுப்புகளை உரிய நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். வணிகர்கள் இன்று நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் நிறைய ஏமாற்றப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டில் தகராறு ஏற்படலாம். உடன்பிறப்புடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்றைய நாள் பண விஷயத்தில் சாதாரண நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் சில பருவகால நோய்களால் அவதியுறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று, பெரிய வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் அவசர அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் பதவி உயர்வு ரூபத்தில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அலுவலகத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் கூடுதல் நேரத்தை செலவிடலாம். உங்கள் உற்சாகம் வீட்டின் சூழலை மேலும் சிறப்பாக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் பரிசுகளையும் வாங்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கன்னி

கன்னி

காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உங்கள் துணையுடன் தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற விஷயங்கள் உங்கள் உறவை பலவீனப்படுத்தலாம். மறுபுறம், திருமணமானவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்படலாம். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், தளபாடங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பணிபுரிபவர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இன்று நீங்கள் நிறைய பணத்தைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இரவில் லேசான உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், போக்குவரத்து தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள். சில புதிய வேலைகளை செய்ய திட்டமிட்டால், விரைவில் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம். அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் அனைத்து வேலைகளையும் முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பீர்கள். உங்கள் நேர்மறை ஆற்றலைக் கண்டு உங்கள் உயர் அதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையில் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று வங்கித் துறையுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும். உயர் பதவி கிடைக்கலாம். இதனுடன், உங்கள் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இன்று அவசர அவசரமாக எந்த ஒரு வியாபார முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் பெற்றோருடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் விலையுயர்ந்த ஒன்றை வாங்க விரும்பினால், இன்று அதற்கு சரியான நாள். உடல்நலம் குறித்து அலட்சியம் காட்டாதீர்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு

தனுசு

தொழிலதிபர்கள் பதவி உயர்வு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நல்ல லாபத்தைப் பெற விரும்பினால், உங்கள் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த நேரம் மிகவும் முக்கியமானது. நீங்கள் கடினமாக உழைத்தால், சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று அரசு ஊழியர்களுக்குப் பொறுப்புச் சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் நிறைந்த நேரத்தை பெறுவீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் துணையின் முன்பு உங்களது உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியும். உடல்நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்

மகரம்

உங்கள் மனக் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவது போல் தெரிகிறது. மனதில் நிறைய குழப்பங்கள் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் விரும்பிய திட்டத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெறலாம். வியாபாரிகள் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்கள் நிதி பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பழைய உணவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கும்பம்

கும்பம்

அலுவலகத்தில் ​தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்களுக்கு சில பெரிய அலட்சியங்கள் ஏற்படலாம். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் முன்னேற்றத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். பங்குச் சந்தை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல நாள் அல்ல. உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவை எடுத்தாலும் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணையின் நடத்தையில் சில நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். நீங்கள் மது போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில், நீங்கள் கடுமையான நோய்களின் பிடியில் விழலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்

மீனம்

வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய வாடிக்கையாளருடன் இணைய முடியும். உங்கள் தொழிலில் புதிய திருப்புமுனைக்கான அறிகுறிகள் தென்படும். அரசு ஊழியர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும். உயர் பதவி கிடைக்கலாம். தனியார் நிறுவன ஊழியர்களும் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் செலவு செய்தால், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், விரைவில் நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் காதுகளில் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 10, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion