Today Rasi Palan 09 March 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய பிரச்சனை ஒன்று வரப்போகுது.. கவனமா இருங்க..

இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 09 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 09 March 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 09 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். குறைவான முயற்சியிலேயே உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று வீட்டு வசதிக்காக நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும். வேலையைப் பொறுத்தவரை, நாள் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 முதல் 10:25 வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால், அது பெரிய மருத்துவ செலவை வைத்திவிடும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரிகளுக்க நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று வேலை செய்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு மேம்படும். இன்று உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் அக்கறை காட்டுவது நல்லது. கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறத. நிதி நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும், பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 முதல் மதியம் 12:30 வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்தால், இன்று முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இன்று உங்களை நிறைய பேர் ஏமாற்ற வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று மிகுந்த சோர்வை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 முதல் இரவு 7 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு அவசரமும் உங்கள் சிரமத்தை அதிகரிக்கும். நிதி ரீதியாக, இன்று நன்றாக இருக்கும். நல்ல பண வரவைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை புறக்கணிக்காமல் சரியாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 முதல் பிற்பகல் 2:30 வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இருப்பினும் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவுகளை செய்யாதீர்கள். வேலை தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 முதல் 10:30 வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் முக்கிய பணிகளை வேகமாக முடிக்க முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இன்று சில பெரிய தடைகளை சந்திக்கலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பலவிதமான கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள் மற்றும் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் தவிப்பீர்கள். வேலையை செய்தால், அதை முழு அர்ப்பணிப்புடன் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கடின உழைப்புக்கான பலனை இன்று பெறுவீர்கள். வணிகர்கள் முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். நிதி ரீதியாக, இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பயணம் செய்வதற்கான வாய்ப்புள்ளன. இந்த பயணம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக இன்று சுமாராக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 முதல் மதியம் 12:30 வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்தால், இன்று முடிவுகளை மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு எடுக்காமல், நீங்களே எடுக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையில்லாத விஷயங்களுக்கு செலவழிக்காதீர்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், இன்று அதிலிருந்து விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் மோதல்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இன்று சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, அதிக காபி மற்றும் டீ குடிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 முதல் மதியம் 12:45 வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய வேலையைத் தொடங்க இன்று சிறந்த நாள். நிதி ரீதியாக, செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். எனவே இன்று அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 முதல் மதியம் 1:30 வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 9, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion