Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan 08 March 2023: இன்று இந்த ராசிக்காரங்க நிறைய சவால்களை சந்திக்கப் போறாங்க...
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 08ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 08ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வேலையில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் விரைவில் லாபத்தைப் பெற குறுக்குவழியில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தைப் பொறுத்தவரை, இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை அலட்சியமாக எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால், நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வியாபாரிகள் இன்று சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 முதல் 9:30 வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்து, அரசு சம்பந்தமான வேலைகளை நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்தால், அதை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்றைய தினம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையுடன் உங்கள் இமேஜும் பாதிக்கப்படும். வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வீட்டின் உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8:45 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் திட்டங்களில் சில மாற்றங்களை செய்ய நேரிடும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இன்று அவசரப்படாதீர்கள். எதையும் நன்கு யோசித்த பின்னரே முடிவெடுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் வீட்டு சூழல் இனிமையாக இருக்க, உங்கள் நடத்தையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். உங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:25 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரியின் நட்புறவு கிடைக்கும். இன்று உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 முதல் 11 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் போட்டிகள் அதிகரிக்கும். இதனால் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் முக்கியமான வேலைகள் தடைபடலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனை இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 முதல் மதியம் 2:55 வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று எதையும் சிந்தித்து பேச அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையில் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. பணம் சம்பந்தமான எந்த வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், முதலீடு விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று வேலை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பின் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். நல்ல பண பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களின் வேலையை வெற்றிகரமாக முடிக்க அன்பானவர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். எந்த முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 முதல் இரவு 8 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்களின் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பைப் பெறுவார்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











