Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 07 March 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகமா இருக்கும்.. உஷார்...
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 07ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 07ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் கடினமான சூழ்நிலைகளிலும் வேலைகளை எளிதில் முடிக்கும் உங்களின் திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவார்கள். வணிகர்களுக்கு இன்று பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையானது வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலில் சில வலிகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வேலை செய்பவர்களுக்கு சற்று பிஸியாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். அதுவும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்டிருந்தால், இன்று கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 9:50 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்பத்தினருடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறு விஷயங்களுக்காக சண்டை போடாதீர்கள். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். சிக்கிய பணம் கிடைக்கலாம். அலுவலகத்தில் இன்று முக்கிய விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 முதல் இரவு 7 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உடன்பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைவான முயற்சியில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் முடிவுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று காதல் வாழ்க்கை சற்று பதட்டமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்களின் கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அமைதியாக செயல்பட்டால் உங்களி வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன உளைச்சல் காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு இன்றைய தினம் சவாலாக இருக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தினசரி வழக்கத்தில் மாற்றங்களை செய்து, சுறுசுறுப்பாக இருந்தால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 முதல் இரவு 8:45 வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் அர்ப்பணிப்புடன் உங்கள் வேலையை செய்வீர்கள். அதனால் உயர் அதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு இன்றைய தினம் நன்றாக இருக்கும். லாபத்தைப் பெற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களின் பெரிய பிரச்சனை தீர்வுக்கு வரும். நிதி நிலை மேம்படும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, போதுமான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பழைய நோய் மீண்டும் தோன்றலாம். தொழிலதிபர்களுக்கு திடீரென்று பெரிய லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். ஒரு வேலையைச் செய்து முன்னேற்றத்தை காண விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலை சுமாராக இருக்கும். இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்க வேலையை சரியான நேரத்தில் முடித்து நிம்மதியடைவீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களிடம் சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். கோபமும் அவசரமும் உங்கள் வீட்டின் அமைதியை சீர்குலைக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 முதல் மாலை 6 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் விதிகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரிகள் இன்று பயணத்தை தவிர்க்க வேண்டும். வேலையுடன், குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தினால் நல்லது. நிதியைப் பொறுத்தவரை, இந்நாள் நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:05 முதல் இரவு 8:50 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்றைய தினம் வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும். நல்ல பண பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். சில முக்கியமான வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். நிதியை பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பலவீனமாகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் 10:50 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள். சிறு தவறும் உங்கள் முன்னேற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு வேலை செய்பவர்கள் இன்று நற்செய்தியைப் பெறலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:20 மணி வரை



Click it and Unblock the Notifications











