For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 04 October 2022: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது...

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 04ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 04 October 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 04ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

அரசு ஊழியர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைக் கொடுக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். தனியார் நிறுவன ஊழியர்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளை காணலாம். பழங்கள், இனிப்புகள், அலங்காரங்கள் போன்றவை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். மர வியாபாரிகளும் நல்ல லாபம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். இன்று உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் திருமண வாழ்க்கை மனஅழுத்தம் நிறைந்ததாக இருந்தால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்றால், உங்களிடையே பிரிவினை சாத்தியமாகும். காதல் வாழ்க்கையிலும் இன்று சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் சுறுசுறுப்பான தன்மை உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். இதனுடன், நீங்கள் எந்த முக்கியமான நிதி முடிவையும் எடுக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான சந்திப்பு இருக்கலாம். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறு வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் மட்டுமல்ல சக ஊழியர்களும் உங்களைப் பாராட்டுவார்கள். நீங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டால், இன்று நிலைமை மேம்படும். சில சிறிய வேலைகள் உங்களுக்கு பெரிய நிதி நன்மைகளை அளிக்கலாம். இன்றைய நாள் மாணவர்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். கல்வித் துறையில் சில பெரிய வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்பினால் உங்களின் இந்த கனவு விரைவில் நிறைவேறும். வாழ்க்கைத் துணைளயுடன் நல்லிணக்கம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

கடகம்

கடகம்

நீங்கள் இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். அதே போல் தேவையில்லாமல் கவலைப்படுவதும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வேலை சம்பந்தமாகப் பேசினால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும். உங்கள் முக்கியமான வேலையில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், இன்று அவர்களின் உதவியுடன் நீங்கள் இந்த சிக்கலை தீர்க்க முடியும். வியாபாரிகள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக உங்கள் தந்தையுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்

சிம்மம்

அரசு ஊழியர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் உயர் பதவியைப் பெறலாம். அதே போல் உங்கள் சம்பள உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். சில்லறை வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டில் எந்த ஒரு உறுப்பினரின் உடல்நிலை சரியில்லை என்றால், இன்று அவர்களின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் அழகான திருப்பம் ஏற்படலாம். இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், உங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

காதல் விஷயத்தில் இன்று மிகவும் காதல் நிறைந்திருக்கும். உங்கள் துணையுடன் உங்களுக்கு பிடித்தமான இடத்திற்கு பயணம் செய்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கலாம். திருமணமானவர்கள் தங்கள் சலிப்பான வாழ்க்கையில் சில வண்ணங்களை நிரப்ப முயற்சிக்க வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இன்று வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு குறைந்த நேரத்தில் அதிக வேலை முடிக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

துலாம்

துலாம்

இன்று மாணவர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். பெரிய மரியாதையைப் பெறலாம். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். இப்படி தொடர்ந்து கடினமாக உழைத்து முன்னேறுங்கள். வணிகர்கள் கலவையான முடிவுகளைப் பெறலாம். அவசரப்பட்டு உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் முடிவை எடுக்காதீர்கள். உங்கள் நிதி நிலையை கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுங்கள். இந்த நேரத்தில் பெரிய தொகையை கடனாக வாங்குவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. குடும்ப ஒற்றுமை குலைந்து போகலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று அலுவலகத்தில் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால், இன்று உங்கள் முயற்சிகள் தோல்வியடையக்கூடும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள். நீங்கள் ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் துணையிடம் இந்தப் பிரச்சனையை பேசி சமாளிக்க முயற்சி செய்யுங்கள். அமைதியாக இருந்தால் தவறான புரிதல் அதிகரிக்கும். பேசினால் மட்டுடே உங்கள் துணை உங்கள் கருத்தை புரிந்துகொள்ள முடியும். திருமணமானவர்கள் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். அதிக மன அழுத்தம் காரணமாக உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்காது. பொதுவாக, இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

இன்று நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் நேர்காணலுக்குச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறையாக இருந்து சிறந்ததை வழங்க முயற்சிக்கவும். நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் எலும்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை

மகரம்

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். தடைப்பட்ட பணத்தை இன்று பெறலாம். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு பெரிதும் பாராட்டப்படும். மேலதிகாரிகளும் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து உங்கள் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். இப்படி கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். உங்கள் முன்னேற்றக் கனவு விரைவில் நிறைவேறும். வியாபாரிகளுக்கு இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கலாம். வரும் நாட்களில் உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை

கும்பம்

கும்பம்

ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். தினமும் லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். குடும்பத்தில் இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். திடீரென்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவும் வலுவாக இருக்கும். சில காலம் உங்கள் வாழ்க்கைத் துணை அன்றாட வேலைகளில் மும்முரமாக இருந்து உங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போனால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்காக வீட்டில் ஒரு ஆச்சரியத்தைத் திட்டமிடுவார்கள். பொருளாதார நிலை மேம்படும். நிதி ஆதாயம் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சில பெரிய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதையோ, கிசுகிசுப்பதையோ தவிர்க்கவும். நிதிக் கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. திடீர் செலவுகளால் உங்கள் நிதி நிலை தடுமாறக்கூடும். இதன் காரணமாக நீங்கள் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து பரிசும் பெறலாம். அவசரம் மற்றும் பீதியைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் காயமடைய வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 04 October 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 04 october 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Tuesday, October 4, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion