For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்கவும்...

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 02 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

Today Rasi Palan -02 December 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 02 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். முதலில் உழைக்கும் மக்களைப் பற்றிப் பேசினால், உத்தியோகஸ்தர்களின் நிலை வலுவடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் இன்று குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் பெரும் நிவாரணம் பெறலாம். மறுபுறம், இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும், பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நாள் சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்:28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

சிந்திக்காமல் செலவு செய்யும் பழக்கத்தால் இன்று உங்கள் சிக்கலில் அதிகரிக்கும். எந்த ஒரு பெரிய செலவும் செய்யும் முன்பு உங்கள் வருமானத்தை மனதில் வைத்திருப்பது நல்லது. வேலை விஷயமாக இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள், சட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாற்றம் ஏற்படலாம். இருப்பினும், புரிதலுடன் விஷயத்தை கையாள முடியும். இன்று உடல் நலம் கலங்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்றைய நாள் வேலையின் அடிப்படையில் உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற ஆணவம் உங்கள் வேலைக்கும் நல்லதல்ல. தொழிலதிபர்கள் இன்று தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்கும். இன்று சில சட்ட நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். வீட்டைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழிக்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் ஏற்படும். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வலுவடையும். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால் கவனக்குறைவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடகம்

இன்றைய நாளின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உங்களின் நிதிப் பிரச்சனை விரைவில் தீரும். உத்தியோகஸ்தர்கள் வேலை சம்பந்தமாக சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால் நீங்கள் விரைவில் முன்னேறலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் முடிக்கப்படாத சில வேலைகள் இன்று முடிவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். திறந்த மனதுடன் உங்கள் தரப்பை முன்வைப்பது நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இன்று அவை திருடப்படவோ அல்லது இழக்கப்படவோ வாய்ப்புள்ளது. இதைத் தவிர, பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வீட்டுப் பெரியவர்களின் முழு ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, ​அலுவலகத்தில் முதலாளியின் மனநிலை மிகவும் சூடாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வேலையில் சிறிது கவனக்குறைவு உங்களுக்கு சிக்கல்களை உருவாக்கும். இன்று கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் தங்கள் முடிவுகளை கவனமாக எடுக்கவும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரண நாளாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று வியாபாரிகள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுத்தால், தவறான முடிவை சந்திக்க நேரிடும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளை காணலாம். நீங்கள் உயர் பதவியைப் பெறலாம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வங்கி அல்லது மென்பொருள் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுக்கு, இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். பேச்சுவார்த்தை மூலம் உங்களிடையே உள்ள கசப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம்

சிறிதளவு முயற்சி எடுத்தால், இன்றைய நாள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மறக்க முடியாத நாளாக அமையும். உங்கள் நடத்தையில் கொஞ்சம் மென்மையைக் கொண்டு வந்தால், அனைத்தையும் வெல்ல முடியும். இன்று உங்களுக்கு நீங்களே பிரச்சனையை உருவாக்கிக் கொள்வீர்கள். இன்று உங்களின் நிதி நிலை அடிப்படையில் நல்ல நாள். வருமான ஆதாரங்களைப் பெறுவதன் மூலம், உங்கள் நிதிப் பக்கம் வலுவாக இருக்கும். அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையை முழு கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள். இது உங்களுக்கு சரியான பலனைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியின் பார்வை உங்கள் மீது இருக்கும். எனவே, சக ஊழியர்களை விமர்சிப்பதைத் தவிர்த்து உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் மேலதிகாரிகளுக்கு முன்னால் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தந்தையின் ஆதரவுடன், இன்று நீங்கள் நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு இன்று நிறைய செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் துணையின் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 12:20 மணி வரை

தனுசு

தனுசு

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று நீங்கள் குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிடலாம். சுற்றுலா செல்லவும் திட்டமிடலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. அதனால் ஒரு சிறிய விஷயத்தில் அவர்களுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். ஆனால் அதற்காக கவலைப்பட ஒன்றுமில்லை. மாலைக்குள் எல்லாம் அமைதியாகிவிடும். அலுவலகத்தில் வெட்டி பேச்சு, வீண் வதந்திகளில் இருந்து விலகி, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாள். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையும். பயணம் செய்வதற்கு இன்று நல்லதல்ல. குறிப்பாக நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். அது உங்களை சோர்வாகவும் பலவீனமாகவும் உணர வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை

மகரம்

மகரம்

பண விஷயத்தில் இன்று நல்ல நாள். திடீரென்று சில பெரிய நிதி நன்மைகள் உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தும். அதுமட்டுமின்றி, இன்று நீங்கள் பழைய குடும்பக் கடனையும் திருப்பி செலுத்த முடியும். இன்று உங்கள் தந்தை உங்களுடன் சிறிது மகிழ்ச்சியற்றவராக இருப்பார். அவர் உங்களின் எந்த முடிவுகளிலும் உடன்படாமல் போகலாம். மேலும் இந்த நேரத்தில் வீட்டுப் பொறுப்புகளைப் புறக்கணிக்காதீர்கள். திருமண வாழ்விலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் பிரிவினையை நீக்க முயற்சிக்க வேண்டும். உரையாடல் மூலம் இது சாத்தியமாகும். எனவே, இன்று உங்கள் அன்பானவரின் முன்பு உங்கள் பக்கத்தை வெளிப்படையாக முன்வைக்கவும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது நல்லது. எந்த வகையான பொய்யையும் கூற வேண்டாம். வணிகர்களுக்கு இன்றைய பயணங்கள் நன்மை பயக்கும். மாலையில் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலையும் மேம்படும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். மேலும், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களுக்கு ஒரு சவாலான சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் அணுகுமுறையை நேர்மையாக வைத்திருங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முன்பு உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக புரிய வையுங்கள். மற்றவர்களின் விஷயங்களில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். உங்களுடைய பழைய மற்றும் முக்கியமான சில தொடர்புகள் உங்களுக்குப் பெரிதும் பயன்படும். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். மேலும், உங்கள் நாளை முழுமையாக அனுபவிப்பீர்கள். பயணத்திற்கு இன்று ஏற்ற நாள் அல்ல.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீனம்

இன்று திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் நல்ல நாள். உங்களிடையே அன்பு, பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். எந்தத் துறையிலும் வெற்றிபெறும் திறன் உங்களுக்குள் உள்ளது. எனவே, உங்கள் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் முழு ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மேலும் உங்களின் அனைத்து முக்கியமான பணிகளையும் முடிக்க முயற்சிப்பீர்கள். வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்யலாம். உங்கள் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட முடியும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக அமையும். இன்று எந்த விதமான விவாதத்தையும் தவிர்க்கவும். ஏனெனில் விஷயங்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். இதனால் நீங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -02 December 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 02 December 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, December 1, 2021, 23:15 [IST]
Desktop Bottom Promotion