Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிப்ரவரியில் நிகழும் 3 கிரக மாற்றங்களால், இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளால் 5 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது அதிர்ஷ்டமானதாக, ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக்கூடியதாக இருக்கப் போகிறது.
2023 ஆம் ஆண்டின் காதல் மாதம் என்று அழைக்கப்படும் பிப்ரவரி மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த பிப்ரவரி மாதத்தில் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றப் போகின்றன. ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றங்கள் தான் ஒருவரது வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதை தீர்மானிக்கிறது. அதுவும் பிப்ரவரி மாதத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் ராசிகளை மாற்றவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

அதில் பிப்ரவரி 07 ஆம் தேதி புதன் மகர ராசிக்கு செல்கிறார், பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார் மற்றும் பிப்ரவரி 15 சுக்கிரன் மீன ராசிக்கு செல்கிறார். இது தவிர புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற மறுநாளே, கும்ப ராசியில் அஸ்தமனமாகிறார். இந்த கிரக பெயர்ச்சிகளால் 5 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது அதிர்ஷ்டமானதாக, ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக்கூடியதாக இருக்கப் போகிறது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
பிப்ரவரி மாதமானது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏராளமான நற்பலன்களை வழங்கும் மாதமாக இருக்கப் போகிறது. இந்த மாதத்தில் அபரிமிதமான நிதி பலன்கள் கிடைக்கப் போகின்றன. கடனாக கொடுத்து நீண்ட நாட்களாக கைக்கு கிடைக்காமல் இருந்த பணம், இந்த மாதத்தில் திரும்ப கிடைக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதமானது அற்புதமானதாக இருக்கப் போகிறது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் பண பரிவர்த்தனை செய்யும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்களின் மரியாதை இம்மாதத்தில் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகளானது நல்ல பலன்களை வழங்கப் போகிறது. அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
பிப்ரவரி மாதமானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தை தரும் மாதமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இம்மாதத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல பண பலன்கள் கிடைக்கும். பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அமோகமாக இருக்கும். இந்த மாதத்தில் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
