Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
கலிஃபோர்னியா கடற்கரையில் மிகவும் வினோதமான தோற்றமளிக்கும் ஆண்குறி வடிவ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த உலகம் முழுவதும் பல விசித்திரங்கள் நிறைந்துள்ளன. பல்வேறு காலநிலை மாறுபாடுகள், பல விசித்திரமான மனிதர்கள் மற்றும் விசித்திர விலங்குகள் என உலகம் முழுவதும் பல மாறுபட்ட விசித்திரங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தொடர்ந்து வசித்துவரும் போது, அந்த பகுதியை விட்டு வேறொரு இடத்திற்குச் செல்லும்போது, அந்த இடம் உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம்.

நான் விசித்திரமானதை பற்றி விசித்திரமாகக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். இங்கே நாம் பார்ப்பதே ஒரு வினோதமான விஷயம் பற்றித்தான். ஒரு விசித்திரமான மீனைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

கலிஃபோர்னியா கடற்கரை
கலிஃபோர்னியா கடற்கரையில் மிகவும் வினோதமான தோற்றமளிக்கும் ஆண்குறி வடிவ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. வடக்கு கலிபோர்னியாவில் பலத்த குளிர்கால புயல்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்குறி மீன்கள் கலிபோர்னியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இதை பார்க்கும் மனிதர்கள் இதன் வடிவத்தைக் கண்டு ஆச்சிரியமடைகிறார்கள்.

ஆண்குறி வடிவ மீன்கள்
ஆண்குறி வடிவம் கொண்ட இந்த மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த மீன்கள் சுமார் 10 அங்குல அகலம் கொண்டவை. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள டிரேக்ஸ் கடற்கரையில் பல மீன்கள் மற்றும் வினோதமான ஆண்குறி வடிவ மீன்கள் கிடக்கின்றன. இதை "ஆண்குறி மீன்கள்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

புழுக்கள்
மேலும், கடற்கரையில் கிடக்கும் பல உயிரினங்களைக் கொழுப்பு விடுதி புழுக்கள் (யுரேச்சிஸ் கப்போ) மற்றும் ஸ்பூன் புழு ((எச்சியூரோய்டியா) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஆண்குறி வடிவம் போல தோற்றமளிக்காத கடல் புழுக்கள்.

மணலில் புதைந்திருக்கும்
இந்த ஃபாலிக் உயிரினங்கள் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் காணப்படுகின்றன. இவை பொதுவாக மணலுக்கு அடியில் புதைந்திருக்கும். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட புயல் வலுவான அலைகளைக் கொண்டு வந்து மணல் அடுக்குகளைத் துடைத்து அவற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

ஆச்சிரியமாக பார்க்கும் மக்கள்
இந்த உயிரினங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தயவை. இவை தென் கொரியாவில் ஒரு நகைச்சுவையாக கருதப்படுகின்றன. இந்த ஆண்குறி மீன்களை கைகளில் வைத்து ரசிக்கின்றன பலமக்கள். ஓட்டர்ஸ், பிற மீன், சுறாக்கள் மற்றும் புழுக்கள் போன்றவையும் கடற்கரையில் கிடக்கின்றன. ஆனால் ஆண்குறி மீன்கள் மட்டும் சிலருக்கும் ஒரு மனித நகைச்சுவையாக இருக்கிறது. தென் கொரியாவில், இந்த மீனை கெய்புல் என்று அழைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications