Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
வாழ்கையில் ஜெயிக்கப் போறவங்க யாரும் இந்த வார்த்தைங்கள எப்பவும் சொல்லவே மாட்டாங்க...!
இந்த உலகில் மகிழ்ச்சியானவர்களிடமும், வெற்றிகரமானவர்களிடமும் ஒருவித தனி ஆளுமை இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சில வார்த்தைகளை கூறவே மாட்டார்கள்.
இந்த உலக்தில் பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா என்றால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். இந்த உலகில் மகிழ்ச்சியானவர்களிடமும், வெற்றிகரமானவர்களிடமும் ஒருவித தனி ஆளுமை இருக்கும்.

அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சில வார்த்தைகளை கூறவே மாட்டார்கள். வார்த்தைகள் ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். நீங்கள் கூறும் சில சாதாரண சொற்கள் கூட உங்களை பெரிய இக்கட்டிலிருந்து காப்பாற்றும், அதேபோல பிரச்சினையிலும் மாட்டிவிடும். நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள்தான் நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதன் அடையாளமாக இருக்கும். இந்த பதிவில் மகிழ்ச்சியானவர்கள் எந்தெந்த வார்த்தைகளை எப்போதும் உபயோகிக்க மாட்டார்கள் என்று பார்க்கலாம்.

எனது இலட்சியங்களும், கனவுகளும் காத்திருக்கும்
பெரிய செயல்களை செய்ய நீங்கள் செயல்பட வேண்டும், அதற்கு முன்னால் அதனை பற்றி கனவு காண வேண்டும், திட்டமிடுவது மட்டும் பத்தாது அதன்மேல் நம்பிக்கையும் வைக்க வேண்டும். தைரியமானவராகவும், கனவு காண்பவராகவும், மகிழ்ச்சியான சிந்தனையாளராகவும் இருங்கள். உங்கள் சுற்றி இருப்பவர்களுக்கு உற்சாகத்தை பரப்ப மறக்காதீர்கள். இது உங்களை மகிழ்ச்சியானவர்களாக மாற்றும்.உங்ககிட்ட இருக்கிற நம்பிக்கைதான் உங்க வெற்றிக்கான சாவி அத மறந்துறாதீங்க.

எனக்கு வேறு வழி இல்லை
நீங்கள் தினமும் எதையாவது தேர்ந்தெடுத்து கொண்டுதான் இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் உங்களுக்கு பிடிக்காத வேலையில் போரடிக் கொண்டிருந்தால் அதனை குறையாக நினைக்காதீர்கள். உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவும் நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நேர்மையாக சிந்தியுங்கள். அதனை ஒரு சுமையாக நினைக்காதீர்கள்.

அவர்கள் சரியாகத்தான் கூறியிருப்பார்கள், அதனால் நான் தவறாக இருக்க வாய்ப்புள்ளது
மற்றவர்கள் உங்களை குழப்ப ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு எது சரியானது என்று உங்களை சமாதானப்படுத்தும் வாய்ப்பை மற்றவர்களுக்கு வழங்காதீர்கள். உங்கள் மனதிற்கு தெரியும், எது உங்களுக்கு பிடித்தது என்று, எனவே அது கூறுவதை கவனியுங்கள். உங்கள் மனக்குரலின் கழுத்தை ஒருபோதும் நெறிக்காதீர்கள். உங்களின் சில தேவைகளுக்கு நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தில் நிற்க வேண்டியது அவசியமாகும்.

இது வேலைக்கு ஆகாது
உங்கள் வாழ்க்கையில் மிகவும் மோசமான தடையாக இருப்பது உங்களின் மோசமான ஆளுமையும், அணுகுமுறையும்தான். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல அதனை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு சிறிய தவறான செயல் பல நல்ல தருணங்களை சிதைக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது. சில மோசமான செயல்கள் உங்களின் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தடுக்க அனுமதிக்காதீர்கள். செயல்கள் நீங்கள் நினைத்தது மாதிரி நடக்கவில்லை என்றாலும் உங்கள் தைரியத்தை இழந்து விடாதீர்கள்.

நான் உன்னை வெறுக்கிறேன்
வெறுப்பு உணர்விலிருந்து நாம் எவ்வளவு விலகி இருக்கிறோமோ, அவ்வளவு சிறந்த விஷயங்களை நாம் நம் வாழ்வில் பெறலாம். நீங்கள் வெறுக்கும் அனைவரும், அனைத்தும் உங்கள் மனதிலும், மூளையிலும் நிரந்தர இடத்தை பெற்றுவிடுவார்கள். எனவே நீங்கள் ஒன்றை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்ற நினைத்தால் வெறுக்காதீர்கள் மாறாக அவற்றிடம் இருந்து விலகி செல்லுங்கள், திரும்பி பார்க்காதீர்கள்.

என்னால் முடியாது
உங்களால் முடியும்! உங்களால் முடியாது என்று உங்கள் மீது அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள். ஏனென்றால் அதனை முடிக்க வாய்ப்பு இருந்திருந்தால் அது முடிந்திருக்கும், அது இல்லாமல் போனதால்தான் முடியவில்லை. எனவே உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதில் பயனில்லை. இதனால் உங்களின் மகிழ்ச்சி சிதையும், மனநிலை பாதிக்கும், உடல்நிலை மோசமாகும். ஆனால் வாழ்க்கை இதனுடன் முடிந்து விடுவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் மிகவும் பெரியது.



Click it and Unblock the Notifications