Latest Updates
-
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதியம் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மகர ராசியில் சனியுடன் செவ்வாய் இணைவதால் இந்த 4 ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில் பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த மாதம் பஞ்சகிரஹி யோக சேர்க்கை நடக்கப் போகிறது. ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லப் போகிறார்.

பிருத்விபுத்திரன் செவ்வாய் 2022 பிப்ரவரி 26 அன்று மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் உச்சத்திலும் இருப்பார்.

சனி பகவான் ஆளும் மகரம்
ஏற்கனவே சனி பகவான் மகர ராசியில் உள்ளார். இந்நிலையில் செவ்வாய் மகர ராசிக்கு செல்லவுள்ளார். ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும். அதிலும் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இந்த வீடு திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையைக் குறிக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் சில சிரமங்களை சந்திக்கக்கூடும். அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் புதிய திட்டங்களில் பணிபுரியும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இதனால் பல பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சில கடுமையான நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடம் மற்றும் வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மன வருத்தமடைவீர்கள். உங்கள் குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் முன் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
