Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
இந்த ராசிக்காரர்களுக்கு சுத்தமா இருக்கவே பிடிக்காதாம்... இவங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க...!
தனுசு ராசிக்காரர்கள் அறையில் புத்திசாலிகளாகவும் சிறந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் இவர்களின் குப்பைத் தொட்டியை நீங்கள் போய்ப் பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள்.
'சுத்தமே சோறுபோடும்', ஒவ்வொரு நாளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என நமக்கு சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க நீங்கள் உங்களை சுத்தமாகவும், உங்களை சுற்றியுள்ள இடத்தை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இது உங்களை பற்றிய ஒரு பிம்பத்தை மற்றவருக்கு ஏற்படுத்தும். சுத்தமில்லாத மற்றும் ஆரோக்கியமற்ற ஒரு நபருடன் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், இதுபோன்ற நபர்களுடன் நீங்கள் இருந்தால், விரைவில் தொற்றுநோயால் நீங்கள் பாதிக்கப்படலாம். ஆதலால், அனைவரும் சுத்தமாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.

இருப்பினும், சிலர் சுத்தம் செய்வதை வெறுக்கிறார்கள் அல்லது தூய்மை என்ற கருத்து அவர்களுக்கு மிகவும் அந்நியமாக தோன்றுகிறது. அத்தகைய நபர்களை பற்றி நாம் ஜோதிடத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சுத்தம் செய்வதை வெறுக்கும் ராசிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் சுத்தமான மனிதர்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் சுத்தமானவர்கள் கிடையாது. அவர்கள் சுத்தமாகத் தோன்றினால், அழகாகத் தோன்றுவதற்கு விரைவாக என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் அலமாரிகளைத் திறந்து பார்க்கவும். ஆடைகள் மற்றும் போர்வைகளின் முழு மலையும் நீங்கள் காணலாம்.

விருச்சிகம்
நீங்கள் விருச்சிக ராசிக்காரர்களை வீட்டில் இருக்க அனுமதித்தால், அவர்கள் மிகவும் அசுத்தமாக இருப்பார்கள். அவர்கள் சில நாட்கள் குளிக்காமல், சுத்தம் செய்யாமல், வீட்டை துடைக்காமல் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சுத்தமான பாத்திரங்களை வைத்திருக்கலாம். ஆனால் சமையலறை மிகவும் அழுக்காக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இருக்கும் இடம் எப்போதும் அழுக்காகவும் சுத்தம் இல்லாததாகவும் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் வெளியில் பார்க்க சுத்தமாகத் தோன்றினாலும் இவர்களது வீட்டைப் பார்க்கும்போது, சுத்தமற்றதாகவும் அழுக்காகவும் இருக்கும். அவர்களுக்கு வீட்டை சுத்தம் செய்வது மலை போன்ற வேலையாக இருக்கும். அதனால், அவர்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேக்கப்பைச் செய்யும்போது, எந்த விதமான லேயரையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதை முதலில் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக எண்ணெய் சருமத்தின் மீது தடவுவார்கள். அவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மற்றபடி சுத்தமாக இருந்தாலும் வீட்டைச் சுத்தம் செய்து, அழுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் கடினம். அவர்களின் குளியலறை, சமையலறை என மொத்த வீடுமே சுத்தமில்லாமல் இருக்கும். ஆனால், இந்த ராசிக்காரர்கள் எப்போதாவது சுத்தம் செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். இது அவர்கள் மனநிலையில் இருக்கும்போது அல்லது வார இறுதியில் வேறு எதுவும் அமைக்கப்படாதபோது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அறையில் புத்திசாலிகளாகவும் சிறந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் இவர்களின் குப்பைத் தொட்டியை நீங்கள் போய்ப் பார்த்தால் அதிர்ச்சியடைவீர்கள். ஆம், இவர்களை உங்கள் வீட்டில் இருக்க நீங்கள் அனுமதித்தால், அவர்கள் சுத்தமில்லாமலும் ஆரோக்கியமில்லாமலும் இருக்கலாம். கடந்த வார இறுதியில் இருந்து குவிந்து கிடக்கும் துணிகளின் குவியல் அல்லது புதிதாக துவைத்த துணிகளின் மீது அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இனிமையான ஆன்மாக்கள், ஆனால் மிகவும் சலிப்பானவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வேலை செய்வது மிகவும் சலிப்பானதாக தோன்றும். இதனால், அவர்கள் சுத்தம் செய்வதை வெறுக்கிறார்கள். அவர்கள் சுத்தமாக இருந்தால், அவர்களுக்கு வெகுமதிக்கான எதிர்பார்ப்பு இருக்கும். தங்கள் வேலையை செய்யாமல் இருப்பதற்கு கோடிக்கணக்கான சாக்குகளை அவர்கள் கூறுவார்கள். அதனால், ஒரே பெட் ஷீட்டில் பல மாதங்கள் கூட அவர்கள் தூங்குவார்கள்.

இதர ராசிக்காரர்கள்
தங்களையும், தாங்கள் இருக்கும் இடங்களையும் சுத்தம் செய்யும் விஷயத்தில் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய ராசிகள் சிறந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தம் செய்கிறார்கள். சுத்தமே இவர்களின் முதல் வேலையாய் இருக்கும்.



Click it and Unblock the Notifications