Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்கள் வீட்டை விட்டு வறுமை எப்போதும் செல்லதாம் தெரியுமா?
பொதுவாக வாஸ்து சாஸ்திரம் என்பது உங்கள் வீட்டில் எந்த பொருளை எங்கு வைக்கக்கூடாது என்று கூறுவது மட்டுமில்லை மாறாக வீட்டில் எதை வைக்கக்கூடாது என்பதையும் கூறுவதாக இருக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு தொன்மை வாய்ந்த சாஸ்திரமாகும். இன்றும் வாஸ்து சாஸ்திரம் நமது வாழ்க்கையில் இரண்டற கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. நாம் வசிக்கும் இல்லம் தொடங்கி நாம் வேலை செய்யும் அலுவலகம் படிக்கும் கல்லூரி என அனைத்திலும் வாஸ்து இருக்கிறது.

பொதுவாக வாஸ்து சாஸ்திரம் என்பது உங்கள் வீட்டில் எந்த பொருளை எங்கு வைக்கக்கூடாது, எந்த திசையில் வாசல் வைக்க வேண்டும், ஜன்னல் வைக்க வேண்டும் என்று கூறுவது மட்டுமில்லை மாறாக வீட்டில் எதை வைக்கக்கூடாது என்பதையும் கூறுவதாக இருக்கிறது. அதன்படி நீங்கள் வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களுக்கு துரதிர்ஷ்டத்தையும், ஏழ்மையையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் உங்கள் வீட்டில் என்னென்ன வைக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

அழுக்கு நீர்
உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் வீட்டைச் சுற்றியோ அழுக்கு நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டிற்கு தவறான தோற்றத்தை வழங்குவதுடன் மோசமான வாஸ்து சாஸ்திரத்தையும் ஏற்படுத்துகிறது. வீட்டைச் சுற்றி அழுக்கு நீர் இருப்பது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வழிவகுக்கிறது மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.

முள் செடிகள்
உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ முள் செடிகளை வைக்கக்கூடாது, உங்கள் தோட்டத்தில் கூட இந்த வகை செடிகளை வைக்கக்கூடாது. இந்த செடிகள் வீட்டில் இருப்பது உங்களுக்கு ஆரோக்கிய குறைபாட்டுகளை உண்டாக்கும். மேலும் இது உங்கள் இல்லத்தில் சச்சரவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீட்டிற்கு வெளியே கற்கள்
உங்கள் வீட்டிற்கு வெளியே கற்கள் சேகரிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் வேலை இருந்தால் வேலை முடிந்தவுடன் அந்த கற்களை அப்புறப்படுத்தி விடுங்கள். வீட்டிற்கு வெளியே கற்கள் இருப்பது பிரச்சினைகளின் அறிகுறியாகும். இது உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.

குப்பை
குப்பையை சுத்தம் செய்பவர்கள் அதனை அப்புறப்படுத்திவிடுவார்கள் என நாம் அனைவருமே குப்பைகளை வீட்டிற்கு வெளியே வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் குப்பையை வீட்டிற்கு வெளியே வைப்பது ஒரு மோசமான வாஸ்துவாகும். வீட்டிற்கு வெளியே குப்பையை வைத்திருப்பது வீட்டில் நிதி சிக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது கடன் தொல்லையை அதிகரிக்கும்.

மின்கம்பங்கள்
வீட்டிற்கு வெளியே மின்கம்பங்கள் இருப்பது பொதுவானதாக கருதப்படுகிறது. இது ஆபத்தானது மட்டுமல்ல, மோசமான வாஸ்துவாகவும் கருதப்டுகிறது. மின்கம்பத்தில் சிக்கலான வயர்கள் இருப்பது போல உங்கள் வீட்டின் முன் மின்கம்பம் இருப்பது உங்கள் வாழ்க்கையையும் சிக்கலாக்கும். எனவே இது இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

பெரிய மரங்கள்
பொதுவாக வீட்டிற்கு வெளியே பெரிய மரம் வைத்திருப்பது நல்லது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி அவ்வாறு இருப்பது துரதிர்ஷ்டமானதாகும். இது உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி வருவதை தடுக்கிறது. மேலும் இது உங்கள் வீட்டிற்குள் வரும் நேர்மறை ஆற்றலையும் தடுக்கிறது.

வீட்டு நுழைவாயில்
வாஸ்துவின் கூற்றுப்படி, வீட்டிற்கு வெளியே உள்ள பிரதான சாலை நீங்கள் பிரதான கதவின் தளத்தை விட மேலே இருக்கக்கூடாது. உங்கள் கதவு எப்போதும் ஒரே மட்டத்தில் அல்லது பிரதான சாலையை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டில் மற்றும் உங்கள் வாழ்க்கையில் நிறைய தொல்லைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளைக் காண்பீர்கள். உங்கள் கதவு இப்படி கட்டப்பட்டிருந்தால், அதை உடனடியாக சரிசெய்யவும்.



Click it and Unblock the Notifications