Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
மரணத்திற்கு பின் நரகம் சென்று துன்பங்களை அனுபவிக்கக்கூடாது என்று விரும்பினால், கருட புராணம் கூறும் சில விஷயங்களை செய்யுங்கள்.
இந்து மதத்தில் பல மகாபுராணங்கள் உள்ளன. அவற்றில் பிறப்பு, இறப்பு மற்றும் இறப்புக்கு பிந்தைய வாழ்க்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ள ஒரு புராணம் தான் கருட புராணம். இந்த கருட புராணமானது வாழ்க்கையில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனை, மரணத்திற்கு பின் பெறுவதாக கூறுகிறது. அதில் ஒருவர் நல்லதை செய்தால், அவர் மரணத்திற்கு பின் சொர்க்கத்தை அடைவார். அதுவே கெட்டதை செய்து, பிறரை ஏமாற்றி வாழ்ந்து வந்தால், அவர் நரகத்தை அடைந்து பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

சரி யாரெல்லாம் நரகத்தை அடைவார், யாருக்கெல்லாம் பாவ மன்னிப்பு கிடையாது என்று நீங்கள் கேட்கலாம். சிசு கொலை செய்வோர், திருடுவோர், ஏழை எளியோருக்கு உதவாமல் இருப்போர், பிறரை ஏமாற்றி வாழ்பவர், கடவுளை வழிபடாமல் இருப்போர் போன்றோருக்கு பாவ மன்னிப்பே இல்லை மற்றும் இவர்கள் நரகம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் மரணத்திற்கு பின் நரகம் சென்று துன்பங்களை அனுபவிக்கக்கூடாது என்று விரும்பினால், கருட புராணம் கூறும் சில விஷயங்களை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் நரகம் செல்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாக கருட புராணம் கூறுகிறது. இப்போது அந்த விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.

கங்கை நீராடல்
நிறைய பாவங்களை செய்துள்ளீர்களா? கங்கையில் நீராடும் போது, பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் தான் இந்து மதத்திலும், புராணங்களில் கூட கங்கையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதற்கு பௌர்ணமி நாளில் கங்கையில் நீராட வேண்டும். எனவே உங்கள் பாவங்கள் குறைய பௌர்ணமி நாட்களில் கங்கையில் நீராடுங்கள்.

ராம்சரித் மானஸை படிக்கவும்
ஒருவர் மரணத்திற்கு பின் நரகம் செல்லக்கூடாது என்று நினைத்தால், ராம்சரித் மானஸை படிக்க வேண்டும். கருட புராணத்தின் படி, ராம்சரித் மானஸை தினமும் படித்தால் நரக துன்பங்களிலிருந்து விடுபடுவார்.

விஷ்ணு சகஸ்ரநாமம்
தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, ஒருவருக்கு சரியான பாதையை காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை படிப்பதன் மூலம், ஒருவருக்கு ஏற்படும் தீய எண்ணங்கள் மற்றும் தவறான செயல்களின் மீதான நாட்டம் தவிர்க்கப்படும். இதன் காரணமாக மரணத்திற்கு பின் நரக வேதனைகளில் இருந்து விடுபடுவார்.

மரம் நடுவது
ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை மரங்களை நடுகிறாரோ, அவர் அத்தனை செய்ததற்கு சமமாக கருதப்படுகிறார். மரங்களை நடுபவர்கள் மரணத்திற்கு பிறகான நகர துன்பங்களில் இருந்து விடுபடுவார் என்று கூறப்படுகிறது. மேகும் கருட புராணத்தின் படி, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் நெல்லிக்காய், மாங்காய், அரச மரம், வேப்பமரம், துளசி போன்றவற்றை நட வேண்டும். இப்படி செய்தால், நரகத்திற்கு செல்லும் பாதையானது மூடப்பட்டு, சொர்க்கத்திற்கு செல்லும் பாதை திறக்கப்படும்.

பூஜை மற்றும் விரதம்
கருட புராணத்தின் படி, நரகம் செல்வதை தடுக்க சிறந்த வழி, தினமும் கடவுளை பூஜை செய்து வழிபட வேண்டும். இது தவிர நரக சதுர்தசி, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் விரதம் இருப்பவர்கள் நரக துன்பங்களில் இருந்து விடுபடுவார். அதோடு ஹோமம் செய்வது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.



Click it and Unblock the Notifications