Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
ஒருவரது ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
ஒருவர் மீது சனி பகவான் கோபமாக இருந்தால் அல்லது ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருந்தால், ஒருசில அறிகுறிகள் தெரியும். அதாவது வாழ்வில் ஒருசில விஷயங்கள் அடிக்கடி நடக்கும்.
ஜோதிடத்தில், ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் சூரிய பகவான் மற்றும் சாயா தேவிக்கு மகனாக பிறந்தார். இவர் காகத்தினை வாகனமாக கொண்டவர். இவர் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். நவகிரகங்களிலேயே ஈஸ்வரன் பட்டத்தினை பெற்றவர் இவர் மட்டுமே ஆவார். இத்தகைய சனி பகவானைக் கண்டால் பலரும் பயப்படுவார்கள். ஏனெனில் இவர் ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்க பல்வேறு சோதனைகளை வழங்குவார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் மோசமான நிலையில் இருந்தால், அந்நபர் வாழ்வில் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதுவே நல்ல நிலையில் இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒருவர் மீது சனி பகவான் கோபமாக இருந்தால் அல்லது ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருந்தால், ஒருசில அறிகுறிகள் தெரியும். அதாவது வாழ்வில் ஒருசில விஷயங்கள் அடிக்கடி நடக்கும். அந்த விஷயங்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டு சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் மோசமான நிலையில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறிகுறி #1
ஒருவரது ஷூ அல்லது செருப்புக்கள் மீண்டும் மீண்டும் அறுந்து போனால் அல்லது தொலைந்து போனால், அந்நபரின் ஜாதகத்தில் சனி பகவான் மோசமான நிலையில் உள்ளார் அல்லது சனி தோஷம் உள்ளது என்று அர்த்தம்.

அறிகுறி #2
ஒருவரது கடன் தொகை எவ்வளவு முயற்சித்தும் குறையாமல், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், அவரது ஜாதகத்தில் சனி அசுப நிலையில் உள்ளார் அல்லது சனி தோஷம் அவருக்கு உள்ளது என்று அர்த்தம்.

அறிகுறி #3
யார் ஒருவர் தங்களுடைய பற்கள், தலைமுடி மற்றும் கண்கள் போன்றவற்றில் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்களோ, அவர்களது ஜாதத்தில் சனி பகவான் அசுப நிலையில் உள்ளார் என்று அர்த்தம். இந்நிலையில் ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது மற்றும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் செய்வது நல்லது.

அறிகுறி #4
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு சமீப காலமாக அளவுக்கு அதிகமாக தலைமுடி உதிர்கிறது என்றால், அவரது ஜாதகத்தில் சனி பகவான் மோசமான நிலையில் உள்ளார் என்று அர்த்தமாம்.

அறிகுறி #5
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் மோசமான நிலையில் இருந்தால், அந்நபரின் நெற்றியின் நிறம் மாறத் தொடங்குமாம். இந்நிலையில் ஜோதிடரை அணுகி, அவர் கூறும் பரிகாரங்களை மேற்கொண்டு, சனி பகவானின் நிலையை வலுவாக்க முயற்சிக்கலாம்.

அறிகுறி #6
ஒருவரது ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தால், அந்நபர் குடும்பம், வணிகம் அல்லது வேலையில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் தொழில் வாழ்க்கையில் மீளமுடியாத அளவில் மோசமான பிரச்சனையில் சிக்கக்கூடும்.

அறிகுறி #7
ஒருவரது மனநிலை திடீரென்று ஒழுக்கக்கேடான செயல்களான திருடுவது, ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபட தோன்றினால், அவரது ஜாதகத்தில் சனி பகவான் மோசமான நிலையில் உள்ளார் என்று அர்த்தம்.

அறிகுறி #8
உங்களின் உணவுப் பழக்கம் திடீரென மாறி, நீங்கள் கசப்பான, பொரித்த அல்லது அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட தொடங்குகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் உள்ளார் அல்லது சனி கோபமாக உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அறிகுறி #9
ஜாதகத்தில் சனி பகவானின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு அறிகுறி என்னவென்றால், அதிகம் பொய் சொல்லத் தொடங்குவதும், அதிகப்படியான கோபம் கொள்வது மற்றும் விரக்தி அடையவும் நேரிடும். இதைக் கொண்டும் ஜாதகத்தில் சனி பகவான் அசுப நிலையில் இருப்ப அறியலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications