Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் டிசம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
தனுசு செல்லும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிக பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த சூரிய பெயர்ச்சியானது டிசம்பர் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சூரியன் விருச்சிக ராசியில் இருந்து குரு ஆளும் தனுசு ராசிக்கு செல்கிறார்.

தனுசு செல்லும் சூரியனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிக பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது 2022 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்வதால் எந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலம் ஆபத்தானது என்பதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் உறவுகள் மோசமடையக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இதயம் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இந்த சூரிய பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை சொல்லுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது திருமணம் மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். எனவே இக்காலமானது திருமணமான மிதுன ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற ஈகோ மோதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முடிந்தவரை அவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் உங்கள் துணையுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. சூரிய பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க தினமும் பசுக்களுக்கு வெல்லம் மற்றும் ரொட்டியை சாப்பிட கொடுங்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இக்காலம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்வதாக இருந்தாலும் கவனமாக சிந்தித்து பின் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்களின் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் பரிகாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று மாதுளையை தானமாக கொடுப்பது நல்லது.

சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும் பரிகாரங்கள்
* தினமும் காலையில் செம்பு பாத்திரத்தில் சூரியனுக்கு நீரை வழங்கலாம்.
* சூரிய உதயத்தின் போது வெறும் கண்களால் சூரியனை பார்ப்பது நல்லது.
* ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால், எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு டம்ளர் நீரில் சர்க்கரை கலந்து குடிப்பது நல்லது.
* சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்க்க இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஏழை எளியோருக்கு மருந்துகளை வாங்கி கொடுத்து உதவுவதும் சூரியனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.
* சிவப்பு நிற ஆடைகள் மற்றும் பொருட்களை தானம் செய்யலாம்.
* பலவீனமான சூரியனை பலப்படுத்த மாணிக்க ரத்தினக் கல்லை அணியலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
