Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சூரிய பகவான் தனுசு ராசிக்கு செல்வதால் இந்த 5 ராசிக்கு பொற்காலமா இருக்கப் போகுது...
பொதுவாக சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை உண்டாக்கும். அதுவும் தனுசு ராசிக்கு சூரியன் செல்வதால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கப் போகிறது.
சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு நுழைந்தார். பின் இந்த தனுசு ராசியில் இருந்து 2022 ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு மகர ராசிக்கு நுழையவுள்ளார். சூரிய பகவான் எந்த ராசிக்குள் நுழைகிறாரோ, அந்நாளை சங்கராந்தி என்று சொல்வதுண்டு. சூரியன் ஒரு ராசியில்இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தனுசு ராசியில் சூரியன் நுழையும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது.

இந்த மார்கழி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. பொதுவாக சூரிய பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை உண்டாக்கும். அதுவும் தனுசு ராசிக்கு சூரியன் செல்வதால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கப் போகிறது. கீழே தனுசு செல்லும் சூரியனால் சாதகமான பலன்களைப் பெறப்போகும் 5 ராசிக்காரர்களைப் பற்றியும், அவர்கள் பெறவுள்ள பலன்களைப் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசியில் சூரியன் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். 9 ஆவது வீடு உங்களின் அதிர்ஷ்ட வீடு. இந்த அதிர்ஷ்ட வீட்டில் சூரியன் அமர்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். இந்த சூரிய பெயர்ச்சியால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரியும் இடத்தில் நீங்கள் உங்களின் தைரியமும், வீரியமும் அதிகரித்திருக்கும்.

சிம்மம்
aசிம்ம ராசியில் சூரியன் 5 ஆவது வீட்டிற்கு சென்றிருப்பதால், மாணவர்கள் படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் நிதி நிலைமை வலு பெற வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் செய்த முதலீடுகளால் ஆதாயமடைவீர்கள்.

தனுசு
தனுசு ராசியில் சூரியன் முதல் வீட்டில் இருப்பது, இந்த ராசிக்காரர்களை உற்சாகப்படுத்தும். இதுவரை முடங்கிக் கிடந்த வேலைகளை இக்காலத்தில் முடிக்கப்படும். உங்களின் முடிவெடுக்கும் திறன் நன்றாக இருக்கும். பணியிடத்திலும் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் பேச்ச்சாலும், ஆளுமையாலும் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். ஊடகம், அரசியல், கல்வி ஆகிய துறைகளில் பணிபுரியும் இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் மாற்றம் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். நிலுவையில் உள்ள அரசுப் பணிகள் இந்தக் காலக்கட்டத்தில் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்
கும்ப ராசியில் சூரியன் 11 ஆவது வீட்டிற்கு செல்வதால், இந்த ராசிக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். அரசு பணிப்புரிவர்களுக்கும், வேலையை மாற்ற எதிர்ப்பார்ப்பவர்களுக்கும் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இந்த காலத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மையை வழங்கும். குடும்ப வாழ்க்கையில் மூத்த சகோதரர்களுடனான உங்கள் உறவு மேம்படும் மற்றும் அவர்கள் மூலம் ஆதாயங்களும் கிடைக்கும். முக்கியமாக கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீடான கர்ம வீட்டிற்கு சூரியன் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல மற்றும் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே வேளையில் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் ஆசையும் நிறைவேறும். உங்கள் தந்தை பணிபுரிந்து வந்தால், அவரும் நன்மை பெறுவார்.



Click it and Unblock the Notifications
