Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால் மே 15 வரை இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப்போகுது..
2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். மேஷ ராசிக்கு சூரியன் செல்வதால், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். அதோடு மிகவும் முக்கியமான கிரகமாகவும் கருதப்படுகிறார். இத்தகைய சூரியன் ஒருவரது ஆத்மா, ஆளுமை, நிதி மற்றும் தலைமைத்துவத்தைக் குறிக்கிறார். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இப்படி மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரியன் ராசியை மாற்றும் போது, அது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். மேஷ ராசிக்கு சூரியன் செல்வதால், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. இப்போது மேஷம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக உங்கள் எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். இதுமட்டுமின்றி, இக்காலத்தில் உங்கள் பணியிடத்தில் சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இக்காலம் நன்றாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் அற்புதமான பலன் கிடைக்கப் போகிறது. இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சூரிய பகவான் மகிழ்ச்சியைத் தரப் போகிறார். வியாபாரம் மற்றும் அரசுத் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மாற்றம் மிகுந்த நன்மையைத் தரும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால், இப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சூப்பராக இருக்கும். இக்காலத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூக அந்தஸ்து முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நன்றாக இருக்கும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முன்பை விட ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த சூரிய பெயர்ச்சி நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் வெற்றியைத் தேடித் தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமானது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

கும்பம்
மேஷம் செல்லும் சூரியனால் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளையும் பணிகளையும் நிறைவேற்ற முடியும். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். முன்பு செய்த முதலீடுகளின் மூலம் சில நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆற்றலைத் தரும் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கூடுதலாக, குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
