Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
சூரிய பெயர்ச்சியால் பிப்ரவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரங்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கப் போகுது...
கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியை காணப் போகிறார்கள் என்பதைக் கீழே காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கும். சூரியனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தற்போது சூரியன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு நுழைகிறார்.

சூரியன் கும்ப ராசிக்கு நுழையும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சூரியன் ராசியை மாற்றும் போது, அதனால் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறலாம். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியை காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சூரிய பெயர்ச்சியின் போது ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். மேலும் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக உங்களின் செயல்திறனில் நல்ல மாற்றம் தெரியும். இதனால் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

மிதுனம்
பிப்ரவரி மாத சூரிய பெயர்ச்சியின் போது, சூரியன் மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் அரசு வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இக்காலத்தில் இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் வீண் செலவுகள் குறைந்து, நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் தைரியம் அதிகரிக்கும். இதுவரை எங்கேனும் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண்பார்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
