Latest Updates
-
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?
சூரிய பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: புத்தாண்டு இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
ஜோதிடத்தில் மொத்தம் 32 ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கேந்திர திரிகோண ராஜயோகம். இந்த ராஜயோம் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லும் போது உருவானது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களும், நட்சத்திரங்களும் அவ்வப்போது நகர்ந்து கொண்டே இருக்கும். அப்படி நகரும் போது அது மனித வாழ்க்கையை பாதிக்கும். மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது அது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். ஜோதிடத்தில், யோகம் என்பது கிரக சேர்க்கையால் உருவாவதைக் குறிக்கிறது. அந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் எந்த வீட்டில் உருவாகிறதோ, அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.

யோகங்களில் ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகும். ராஜயோகம் உருவானால், அது வாழ்வில் அமைதி, புகழ், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செல்வம் ஆகியவற்றைத் தரும். ஜோதிடத்தில் மொத்தம் 32 ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கேந்திர திரிகோண ராஜயோகம். இந்த ராஜயோம் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லும் போது உருவானது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைப் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கேந்திர திரிகோண ராஜயோகம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கேந்திர திரிகோண ராஜயோகமானது 1, 4, 7 மற்றும் 10 என்னும் கேந்திர வீடு மற்றும் திரிகோண வீடுகளான 1, 5, 9 ஆகிய வீடுகளுக்கு இடையே உள்ள இணைப்பால் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருப்படுகிறது. வேத ஜோதிடத்தில், 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகள் விஷ்ணுவின் வீடுகள் என்றும், 1, 5 மற்றும் 9 ஆகிய வீடுகள் லட்சுமியின் வீடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகத்தால் 2023 புத்தாண்டின் தொடக்கத்தில் நற்பலன்களைப் பெறும் அந்த ராசிக்காரர்களைப் பற்றி காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளாதால், அந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணத்தை அதிகம் சேமிக்க முடிவதோடு, நல்ல நிதி பலன்களையும் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மென்மையாகவும், இனிமையாகவும், ரொமான்டிக்காகவும் இருக்கும். தொழிலில் நற்செய்திகளைப் பெறுவார்கள். கூட்டு தொழில் தொடங்க சிறந்த காலம். வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், அந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். மேலும் இந்த யோகத்தால் வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தாயின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்
கேந்திர திரிகோண ராஜயோகமானது மீன ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டின் தொடக்கத்திலேயே அற்புதமான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். பணியிடத்தில் உங்களின் வேலை சிறப்பாக பாராட்டப்படும். இக்காலத்தில் பலர் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
