Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் சனி சூரிய சேர்க்கை: பிப்ரவரி 13 முதல் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை அதிகரிக்கப் போகுது!
ஏற்கனவே 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு நுழைந்தார். அதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் 2023 பிப்ரவரி 13 முதல் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழும்.
Sun Saturn Conjunction In Aquarius: வேத ஜோதிடத்தின் படி, எப்படி கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் கிரக சேர்க்கைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் நட்பு கிரகங்களின் சேர்க்கை நிகழும், இன்னும் சில நேரங்களில் எதிரி கிரங்களின் சேர்க்கை நிகழும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் எதிரி கிரகங்களான சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழ்கிறது. அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது.

ஏற்கனவே 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு நுழைந்தார். அதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் 2023 பிப்ரவரி 13 முதல் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழும். இந்த சேர்க்கையானது ஒரு மாத காலம் இருக்கும். இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இந்த சேர்க்கை காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்கும். இதுவரை நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஷேர் மார்கெட், லாட்டரி போன்றவற்றில் நல்ல பணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும். ஊடகம், மார்கெட்டிங் போன்ற பேச்சு துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் இந்த சேர்க்கை காலத்தில் உருவாகலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இது வேலையின் வீடாக கருதப்படுகிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் இந்த சேர்க்கை காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு பெறுவதோடு, பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர விரும்பிய இட மாற்றமும் கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதோடு, தொழிலை விரிவாக்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
