For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் இந்த பாவங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாராம்... இதனால் உங்களுக்கு நரகம்தானாம்...!

சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கியமான கடவுளாவார். அழிவின் கடவுளான சிவபெருமானை எளிதில் மகிழ்விப்பது உண்மையில் எளிமையானதாகும்.

|

சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கியமான கடவுளாவார். அழிவின் கடவுளான சிவபெருமானை எளிதில் மகிழ்விப்பது உண்மையில் எளிமையானதாகும். சிவபெருமானை தினமும் நீராடி சிவலிங்கத்தை வழிபட்டால் போதும் அதுவே சிவபெருமானை மகிழ்விக்க போதுமானது. வெளிப்புறமாக மூர்க்கமானவராக தெரியும் சிவபெருமான் உள்ளே மிகவும் இளகிய மனம் கொண்டவர். அதனால் அவர் போலேநாத் என்றும் அழைக்கப்படுகிறார்.

Sins Which Lord Shiva Never Forgive in Tamil

அசுரர்களுக்கு கூட வரங்களை அள்ளிக்கொடுக்கும் சிவபெருமான் மக்களின் சில பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார். அவை எண்ணங்கள், பேச்சு அல்லது செயலால் செய்யப்படலாம். அவை தவறான செயல்கள் மட்டும் உங்களை சிவனின் கோபத்திற்கு ஆளாக்கும் கடுமையான பாவங்களாகும். மனிதர்கள் செய்யக்கூடாத பாவங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவரின் செல்வத்தை விரும்புதல்

மற்றவரின் செல்வத்தை விரும்புதல்

மற்றொருவரின் பணத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். ஒருவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தைத் திருப்பிச் செலுத்த மறக்காதீர்கள். ஒருவர் மற்றவரின் பணத்தின் மீது ஆசைப்படவே கூடாது. இதனால் சிவன் அதிருப்தி அடைவார்.

வேறொருவரின் மனைவியை விரும்புவது.

வேறொருவரின் மனைவியை விரும்புவது.

வேறொருவரின் திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சிப்பது பெரும் பாவமாக சிவபெருமானால் கருதப்படுகிறது. ஒருவர் மற்றொருவரின் மனைவியை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பக்கூடாது அல்லது அவர்களது உறவில் வேறு எந்த விதத்திலும் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.

மற்றவர்களுக்கு எதிராக தீய திட்டங்களைத் திட்டமிடுதல்

மற்றவர்களுக்கு எதிராக தீய திட்டங்களைத் திட்டமிடுதல்

பிறருக்கு எதிராக தீமையான திட்டமிடுவதைக் கூட சிவபெருமான் விரும்புவதில்லை. மற்றவர்களுக்கு எதிராக தீய திட்டங்களை தீட்டுபவர்கள் அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியை அழிக்க முயற்சிப்பவர்கள் சிவபெருமானால் ஒருபோதும் பாராட்டப்படுவதில்லை. அவரைப் போலவே அப்பாவி மக்களை அவர் விரும்புகிறார்.

பெண்களை அவமதிப்பவர்கள்

பெண்களை அவமதிப்பவர்கள்

இந்து மதத்தில் ஒரு பெண்ணை அவமதிப்பது லட்சுமி தேவியை கோபமடையச் செய்கிறது, அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதனை சிவபெருமானும் வெறுக்கிறார். பெண்களை மதிக்காத வீட்டில் எந்த கடவுளும் தங்குவதில்லை. சிலர், அறியாமையால், பெண்கள் மீது அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற கருத்துக்களை வீசுகிறார்கள், இது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், சிவபெருமானை அதிருப்திக்குள்ளாக்குகிறது.

மற்றவர்களை இழிவுபடுத்துதல்

மற்றவர்களை இழிவுபடுத்துதல்

சிவபெருமான் தன்னைப் போலவே குற்றமற்றவர்களையும் விரும்புகிறார். சமூகத்தில் இன்னொருவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுக்க யாராவது முயன்றால், அது சிவபெருமானுக்குக் கோபத்தை உண்டாக்கும். நீங்கள் ஒரு நபரை இழிவுபடுத்த முயற்சித்தால் அது பாவம் என்று அவர் கருதுகிறார். மற்றவர்களுக்கு எதிராக பொய்களைப் பயன்படுத்துவதும், வதந்திகளைப் பரப்புவதும் அவர் பார்வையில் தவறு. ஒருவரின் முதுகுக்குப் பின்னால் பேசுவதும் இதில் அடங்கும்.

திருடுதல்

திருடுதல்

கோவிலில் அல்லது வேறு யாரிடமிருந்தோ சொத்துக்களை திருடுவது சிவபெருமானுக்கு அதிருப்தி தருகிறது. இந்த தவறை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.

பெரியவர்களை அவமரியாதை செய்தல்

பெரியவர்களை அவமரியாதை செய்தல்

பெற்றோரை, ஆசிரியர்களை அவமரியாதை செய்வது அல்லது குறை கூறுவது சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகிறது. ஒருவர் துறவிகளையும் அவமரியாதை செய்யக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sins Which Lord Shiva Never Forgive in Tamil

According to Shiva Purana,Lord Shiva never forgive these sins.
Story first published: Friday, October 7, 2022, 12:18 [IST]
Desktop Bottom Promotion