Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
சனி வக்ர பெயர்ச்சியால் ஜூன் 5 முதல் ஏழரை சனி நடப்பவர்களுக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
சனி ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாகிறார். அதாவது பின்னோக்கி நகர தொடங்குகிறார். சனி வக்ரமாவதால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாக சனி கருதப்படுகிறது. இந்து மதத்தில் சனி கிரகம் சனி பகவானாக வணங்கப்படுகிறது. சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்பட பலனைக் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒருவரது செயல்கள் நல்லதாக இருந்தால் நற்பலன்களையும், தீய செயல்களாக இருந்தால் தீயபலன்களையும் வழங்குவார். இப்படிப்பட்ட சனி ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாகிறார். அதாவது பின்னோக்கி நகர தொடங்குகிறார். சனி வக்ரமாவதால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

கடகம்
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி நடந்த சனி பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கிறது. சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல காரியங்களில் தடைகளை சந்திக்கலாம். ஆனால் சனியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனி பகவான் தொடர்பான பொருட்களை தானம் செய்யுங்கள்.

விருச்சிகம்
2022 ஆம் ஆண்டில் நடந்த சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி நடக்கிறது. சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சற்று மோசமான பலன்களே கிடைக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கோபமே அனைத்து வேலை மற்றும் விஷயங்களையும் கெடுத்துவிடும். மேலும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். சனியின் மோசமான தாக்கத்தை தவிர்த்த, சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. ஜூன் 5 ஆம் தேதி நடக்கும் சனி வக்ர பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருப்பினும் தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரிடும். அதோடு எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

கும்பம்
2022 இல் நடந்த சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் நடக்கிறது. ஆனால் சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் தொந்தரவைத் தரலாம். குறிப்பாக பண விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்த்திடுங்கள். சனியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனி பகவானுடன், அனுமனையும் வணங்குங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2022 சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. ஆனால் சனியின் வக்ர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது. திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். சனியின் கெடுபலன்களைத் தவிர்க்க சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். இதனால் நற்பலன்கள் கிடைக்கலாம்.



Click it and Unblock the Notifications