Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
2022 பிப்ரவரி 18 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு சென்று 2023 மார்ச் 15 ஆம் தேதி வரை பயணிக்கும் சனி பகவானால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வேத சாஸ்திரங்களின் படி, ஒருவரது ஜாதகத்தைப் பகுப்பாய்வு செய்யும் போது அதில் சனி பகவானின் நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகங்களில், சனி பகவான் நீதிமான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். பொதுவாக சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாற சுமார் 2 1/2 வருடங்கள் ஆகும்.

அந்த வகையில் சனி பகவான் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். பெயர்ச்சிகளிலேயே சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு முன் நட்சத்திரத்தை மாற்றுவார். இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இவற்றில் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கப் போகிறது.

சனியின் நட்சத்திர மாற்றம்
ஜோதிடத்தின் படி, சனி பகவான் தற்போது திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றார். இந்த நட்சித்திரத்தில் 2022 பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின்னர் அவிட்டம் நட்சத்திரத்திற்கு மாறி பயணிக்க தொடங்குவார். இந்த அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் 2023 மார்ச் 15 ஆம் தேதி வரை பயணிப்பார்.

அவிட்டம் நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் 23 ஆவது இடத்தில் அவிட்டம் உள்ளது. இந்த அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சனியின் சிறப்பான தாக்கம் இருக்கும். 2022 பிப்ரவரி 18 ஆம் தேதி அவிட்ட நட்சத்திரத்திற்கு சென்று 2023 மார்ச் 15 ஆம் தேதி வரை பயணிக்கும் சனி பகவானால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் செல்வ வளம் பெருக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் அவர்கள் பெறும் பலன்கள் என்னவென்பதை காண்போம்.

மேஷம்
அவிட்டம் செல்லும் சனிபகவானால் மேஷ ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் வேலைகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு வேலையிலும் உங்கள் குடும்பத்தாரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புக்களும் வரக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் சனியின் நட்சத்திர மாற்றத்தால் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். வேலை விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் பண ஆதாயம் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மன உளைச்சல் குறையும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எந்த ஒப்பந்தத்திலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
