Just In
- 3 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 11 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
இந்திய சொட்டு மருந்தை பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழப்பு! சென்னை நிறுவனத்திற்கு பெரிய சிக்கல்
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வக்ர நிவர்த்தி அடைந்த சனியால் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கும் பரிகாரங்கள்!
நவகிரங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்கும் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொங்கியுள்ளார். சனி வக்ர நிவர்த்தி அடைந்ததால், பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் மாற்றத்தால் சிலர் தங்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மேலும் சனி தோஷத்தால் குடும்ப வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் அல்லது செலவுகளை சந்திக்க நேரிடும். தொழில் செய்து வருபவர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்கள் மூலம் சனி பகவானால் சந்திக்கும் பாதகமான விளைவுகளைக் குறைக்கலாம். இப்போது மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும் பரிகாரங்கள் குறித்து காண்போம்.

பரிகாரம் #1
சனி தோஷம் அல்லது சனியால் சந்திக்கும் பிச்சனைகளைக் குறைக்க சனிக்கிழமையன்று சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். மேலும் மனதில் சனி பகவானை நினைத்து தியானம் செய்யுங்கள். இதனால் சனி தோஷத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறையும்.

பரிகாரம் #2
சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் வீட்டின் அருகில் உள்ள கோவிலில் உள்ள சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

பரிகாரம் #3
பண பிரச்சனையை சந்திப்பவர்கள் ஏதேனும் ஒரு சுக்லபட்சத்தின் முதல் சனிக்கிழமையன்று 10 பாதாமை எடுத்து அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு 5 பாதாமை வைத்துவிட்டு, 5 பாதாமை வீட்டிற்கு கொண்டு வந்து, சிவப்பு துணியில் வைத்து கட்டி, வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி செய்வதால் சனி பகவானால் சந்திக்கும் பண பிரச்சனை குறையும்.

பரிகாரம் #4
சனிக்கிழமைகளில் குரங்குகளுக்கு சாதம், வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றை கொடுங்கள். மேலும் ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தை பார்த்து, பின் அந்த எண்ணெயை தானம் செய்யுங்கள். தேங்காயை ஆற்றில் எறியுங்கள்.

பரிகாரம் #5
சனி பகவானால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் கறிவேப்பிலையை அரைத்து அதை உருண்டைகளாக்கி, மீன்களுக்கு உணவாக கொடுங்கள்.

பரிகாரம் #6
ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு நிற நாய்க்கு கடுகு எண்ணெயில் நனைத்த ரொட்டியை சாப்பிட கொடுங்கள். மேலும் இரவு நேரங்களில் கால் நகங்களில் கடுகு எண்ணெயை தடவுங்கள். அதோடு, 7 சனிக்கிழமைகளில் எறும்புகளுக்கு கருப்பு உருண்டையை உணவளியுங்கள்.

பரிகாரம் #7
சனி தோஷங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், சிவ சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். அதோடு அனுமனை வழிபடுவதும் சனியினால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

பரிகாரம் #8
சனி தோஷங்களை குறைக்க சனிக்கிழமைகளில் ஏழை மக்களுக்கு உணவளிப்பது மிகச்சிறந்த பரிகாரமாகும். அதுவும் நீங்கள் பிறந்த நாள் அல்லது உங்கள் வாழ்வில் முக்கியமான நாளாக கருதப்படும் தினங்களில் அன்ன தானம் செய்யுங்கள். இதனால் சனி பகவான் மகிழ்ச்சியடைவார்.