Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
செப்டம்பர் மாதம் வெளிநாடு போகும் யோகம் யாருக்கு - துலாம் முதல் மீனம் வரை பலன்கள்
செப்டம்பர் மாதம் கிரகங்கள் சிம்ம ராசியில் கூட்டணி சேர்ந்திருக்கின்றன. இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். துலாம் முதல் மீனம் வரை வரை எந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் புரம
செப்டம்பர் மாதம் சில ராசிக்காரங்களுக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. வேலையில முன்னேற்றமும் வருமானமும் அதிகரிக்கப் போகுது. சிம்ம ராசியில் ராஜ கிரகம் சூரியன் ஆட்சியில் இருக்க கூடவே தளபதி செவ்வாய், காதல் கிரகம் சுக்கிரன், அறிவு கிரகம் புதன் கூட்டணியில் இருக்காங்க. இந்த கூட்டணி மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் இணைவதால சில ராசிக்காரங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.

நமக்கு நல்ல வேலை கிடைக்குமா? என்று சில பட்டதாரிகள் காத்துக்கிட்டு இருக்காங்க. சிலருக்கு புரமோசன் கிடைக்குமா? நினைச்ச இடத்தில இடமாற்றம் கிடைக்குமான்னு எதிர்பார்க்கிறாங்க. அந்தமாதிரி எதிர்பார்ப்புகளோடு இருக்கிறவங்களுக்காகவே இந்த ராசிபலன். படிச்சு என்ஜாய் பண்ணுங்க.
துலாம் முதல் மீனம் வரை ஆறு ராசிக்காரங்க படிங்க. வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. வருமானமும் அதிகரிக்கப் போகுது. உற்சாகமாக ஊ லலல்லா என்று பாடுங்க மக்களே.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் அப்புறம் விரைய ஸ்தானத்திற்கும் வருகிறார்கள். நல்ல மாற்றங்கள் வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் மாற்றம் வரும். உங்க தைரிய ஸ்தானத்தில் சனியும் கேதுவும் இருக்கின்றனர். ரொம்ப அற்புதம். குருவால் புதிய வேலையும் அதிக வருமானமும் வரும் நீங்க எதிரின்னு நினைச்சவங்க மூலம் கூட வருமானமும் திடீர் அதிர்ஷ்டமும் வரும். இந்த மாதம் நல்ல மாதம் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். உங்களின் நண்பர்களை கவனிங்க அவங்க கூட சேர்ந்தீங்கன்னா நீங்களும் பிரச்சினையில் சிக்குவீங்க ஜாக்கிரதை.

விருச்சிகம்
செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே... அற்புதமான மாதம் இது. வெளிநாடு யோகம் கைகூடி வரப்போகுது. எதையும் தைரியமாக செய்யுங்க. காரணம் கிரகங்கள் சஞ்சாரமும் கூட்டணியும் அற்புதமாக இருக்கிறது. நிறைய சர்ப்ரைஸ் கிடைக்கப் போகிறது. வெளிநாடு சென்று படிக்கப் போகிறீர்கள். பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முன்னேறுவீர்கள். புரமோசனுடன் வருமானம் கூடும். வேலையில் இடமாற்றம் வரும். கவுரவ பதவிகள் தேடி வரும் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. இல்லறம் நல்லமாக மாறும் மாதம் செப்டம்பரில் உற்சாகமாக வலம் வாங்க.

தனுசு
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு தலைமேல் கத்தி தொங்குவது போல பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. இனி கவலைகள் பிரச்சினைகள் தீரப்போகிறது. குருவினால் இப்போதே நன்மை தரப்போகிறார். உடல் நலப்பிரச்சினைகள் இந்த மாதம் தீரும். பெண்களுக்கு பல நன்மைகள் ஏற்படப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பிறக்கப் போகிறது. நல்ல வேலை கிடைக்கும். பெண்கள் பிற ஆண்களுடன் பழகும் போது பாதுகாப்பாக இருங்க இல்லாட்டி சிக்கலில் கொண்டு போய் விடும்.

மகரம்
சனியை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு எட்டாவது வீட்ல சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் கூடி கும்மியடிக்குது. என்னடா இது மகர ராசிக்கு வந்த சோதனை என்று நினைக்க வேண்டாம். மாத முற்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கணும் மக்களே. உடம்புலயும் மனசுலயும் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. பயணங்களில் கவனம் இல்லாட்டி விபத்தில சிக்கணும். மாத பிற்பகுதியில கிரகங்கள் இடமாறுவதால பிரச்சினைகள் குறையும். அப்பாவோட உடம்புல கவனம் செலுத்துங்க. பிசினஸ்ல வருமானம் சும்மா பிச்சிக்கிட்டு போகும். நல்லதை மட்டுமே நினைங்க நல்லதே நடக்கும் மக்களே.

கும்பம்
சனியை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரங்களே... இந்த மாதம் முற்பகுதியில ஏழாவது வீடான சிம்மத்தில நான்கு கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. புகழும் செல்வம் செல்வாக்கு கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில எட்டாவது வீட்ல கிரகங்கள் கூட்டணி சேருவதால் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும் கவனமாக இருங்க. இந்த மாதம் தொழில் வியாபாரத்தில கவனம் தேவை. நல்ல தனவரவு கிடைக்கும். உங்களின் அலுவலகத்தில் பொருட்களை பத்திரமா பாத்துங்க. உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க இல்லாட்டி பெட்ல படுக்கப் போட்ரும் எச்சரிக்கை.

மீனம்
குருவை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாத முற்பகுதியில் கவனம். உடம்புல கவனம் தேவை. கூட இருப்பவங்களே எதிரிகளாக மாறுவாங்க. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த மாதம் ஏழாம் வீட்டில் புதன் சுக்கிரன் சேருவதால் நீச பங்க ராஜயோகத்தால் திருமண முயற்சிகள் கை கூடி வரும். முகூர்த்தம் சிறப்பாக நல்லதாக பார்த்து வையுங்கள். சிலருக்கு வீடு சொத்து வாங்கக் கூடிய நேரம் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து பெருகும். வேலை செய்பவர்களுடன் கவனமாக இருங்க. கணவன் மனைவி உறவு இந்த மாதம் ரொம்ப ரம்மியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications