Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
617 ஆண்டுகளுக்கு பின் உருவான 3 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப் போகுது..
தற்போது குருவும், சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றாக பயணிக்கிறார்கள். அதே சமயம் சனி சூரியனுடன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நான்கு கிரகங்களின் அரிய சேர்க்கையானது 617 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.
Saturn Sun Jupiter Venus Made Three Rajyoga After 617 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களும், நட்சத்திரங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அப்படி மாறும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகலாம். அந்த வகையில் தற்போது குருவும், சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றாக பயணிக்கிறார்கள். அதே சமயம் சனி சூரியனுடன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த நான்கு கிரகங்களின் அரிய சேர்க்கையானது 617 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது.

இந்த கிரகங்களின் சேர்க்கைகளால் சச, மாளவ்யா, ஹன்ஸ் போன்ற ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இந்த மூன்று ராஜயோகங்களின் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் அற்புதமான பலன்களைப் பெற்று, வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொல்லப்போனால் இந்த யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகளும் நனவாக போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மீன ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், ஹன்ஸ் மற்றும் மாளவியா ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலமானது யோகமான காலமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உணர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். முக்கியமாக இக்காலத்தில் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சச ராஜயோகத்தை சனி பகவான் உருவாக்கியுள்ளார். இதனால் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்யா யோகம் உருவாகியுள்ளது. இதனால் தொழில் மற்றும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் அமையும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் மாளவ்யா ரோஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நிதி நிலைமையானது வலுவடையும். வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications