Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
வக்ர சனியால் அக்டோபர் 23 வரை இந்த ராசிக்காரர்களிடம் ஏராளமான செல்வம் சேருமாம்...
கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும்.
ஜோதிடத்தில், சனி துன்பம், வலி, நோய், தாதுக்கள், எண்ணெய், இரும்பு, அறிவியல் போன்றவற்றின் கிரகமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சனி கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாவார் மற்றும் பூசம், அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியும் ஆவார். சனி பகவான் என்றாலே தீங்கு விளைவிப்பவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலைல் இருந்தால், அவர் நற்பலன்களை அள்ளி வழங்குவார். அதுவே பாதகமான நிலையில் இருந்தால், வாழ்க்கை சாதாரணமாகவும், பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும்.

இத்தகைய சனி 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின் ஜூன் 5 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமாக மாறி பயணிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பித்தார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் அக்டோபர் 23 வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் உள்ளார். இந்த வீடு தொழில், வேலை மற்றும் வணிகத்தின் வீடாகும். எனவே வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களின் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றியும், பணமும் கிடைக்கும். கூடுதலாக, வணிகத்தை விரிவுபடுத்த முடியும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் பெரும் பொருளாதார வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது வருவாய் மற்றும் செல்வத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த புதிய வணிக உறவுகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் அல்லது வியாபாரிகள் இக்காலத்தில் பெரும் வெற்றியை அனுபவிப்பார்கள்.

தனுசு
வக்ர சனியால் அக்டோபர் வரை தனுசு ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். இதன் விளைவாக பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க சிறந்த காலமாக இருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்களில் சிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு தொடர்பான வேலையை செய்பவர்களுக்கு இக்காலம் வெற்றிகரமானதாக இருக்கும். கார், வீடு போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
