Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மகரத்தில் சனி வக்ர பெயர்ச்சியால் சனியின் பிடியில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜூலை மாதத்தில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் 2022 ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
2022 ஜூலை மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஜூலை மாதத்தில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் 2022 ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி வரை வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். ஏனென்றால் கிரகங்கள் வக்ரமாகும் போது, நற்பலன்களை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும்.

சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் தாக்கமும் மாறும். ஜோதிடத்தின் படி, சனி தனது ராசியை மாற்றும் போது அது நிச்சயம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி. தனது சொந்த ராசிகளிலேயே சனியின் மாற்றம் நடைபெறுகிறது.

இதுவரை சனியின் பிடியில் உள்ள ராசிகள்
ஜோதிட கணக்கீடுகளின் படி, சனி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். கும்ப ராசியில் நுழைந்ததால், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்டார்கள். மேலும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்கியது.

ஜூலை மாதத்தில் சனியின் பிடியில் இருந்து விடுபடும் ராசிகள்
ஆனால், 2022 ஜூலை 12 ஆம் தேதி சனி வக்ர நிலையில் மகர ராசிக்கு செல்வதால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள். மேலும் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. சனியின் பிடியில் இருந்து விடுபட்ட கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது.

ஏழரை சனி நடக்கும் ராசிக்கும்
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். ஆனால் ஜூலை 12 ஆம் தேதி சனி வக்ர நிலையில் மகர ராசிக்கு செல்லவிருப்பதால், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். அதேப்போல் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் சனியின் பிடியில் சிக்குவார்கள். ஆகவே இந்த பெயர்ச்சிக்குப் பின், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் முக்கியத்துவம்
கிரகங்களிலேயே சனி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகும். சனி கிரகம் சனி பகவானுக்கு இணையாக கருதப்படுகிறது. சனி பகவான் நீதி மற்றும் செயலின் கடவுள். இவர் ஒருவரின் செயல்களின் அடிப்படையில் பலன்களை வழங்குகிறார். இது தவிர, ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிட கணக்கீடுகளின் படி, ஏழரை சனியின் தாக்கம் ஒருவரின் வாழ்க்கையில் நிச்சயம் மூன்று முறை வரும். இது தவிர அஷ்டம, அர்த்தாஷ்டம சனி இரண்டரை வருடங்கள் ஆகும். இக்காலத்தில் சனி பகவான் மக்களின் வாழ்க்கையில் பல சோதனைகளையும், பிரச்சனைகளையும் உண்டாக்கி, வாழ்க்கை என்னவென்பதை புரிய வைப்பார்.

சனி தோஷத்தைக் குறைக்கும் பரிகாரங்கள்:
* சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் வழங்குங்கள்.
* சனி தெய்வ வழிபாட்டில் இரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
* கருப்பு எள்ளு மற்றும் உளுத்தம் பருப்பை தானம் செய்யுங்கள்.
* சனி பகவானுக்கு கருப்பு துணி மற்றும் நீல நிற பூக்களை வழங்கி வணங்குங்கள்.
* முக்கியமாக, சனி மந்திரமான 'ஓம் ஷன் சனிச்சராய நமஹ' என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications
