Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில் பெயர்ச்சியான சில நாட்களிலேயே சனி கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
வேத ஜோதிடத்தில் சனி கிரகமானது சனி பகவானாக கருதப்படுகிறது. இந்த சனி பகவான் ஒருவரது கர்ம செயல்களின் அடிப்படையில் பலன்களை வழங்குபவர். இந்த சனி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும். இந்த சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில் பெயர்ச்சியான சில நாட்களிலேயே சனி கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.

அதுவும் 2023 ஜனவரி 30 ஆம் தேதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமாகவுள்ளார். அஸ்தமனம் என்பது எப்போது ஒரு கிரகம் சூரியனுக்கு 15 டிகிரிக்குள் வரும் போது ஏற்படும் ஒரு சூழ்நிலையாகும். இந்நிலையில் அந்த கிரகத்தின் சக்தி குறைவாக இருக்கும். எனவே ஜனவரி 30 அன்று சனி அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சனி அஸ்தமனத்தால் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். மேலும் புதிய வருமானத்திற்கான வாய்ப்புகளும் தேடி வரும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். அதோடு நல்ல சம்பளத்துடன் பதவி உயர்வும் கிடைக்கும். ஷேர் மார்கெட், லாட்டரி போன்றவற்றில் நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இந்த காலத்தில் நிதி நிலைமைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்கள், ஊடகங்கள் அல்லது மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் அற்புதமாக, முன்னேற்றத்தைத் தரும் காலமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பலம் அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications