Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
டென்னிஸை விட்டு விடைபெற்ற சானியா மிர்சா பற்றி பலரும் அறியாத சில விஷயங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
International Women's Day 2023: ஆணாதிக்கம் கொண்ட இந்தியாவில், பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு தற்போது பல துறைகளில் காலடியைப் பதித்து சாதித்து வருகிறார்கள். அரசியல், தொழில், விளையாட்டு என்று அனைத்து துறைகளிலுமே பெண்கள் சாதனை புரித்து வரலாற்றில் இடம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கணை தான் சானியா மிர்சா.

இவர் இந்திய நாட்டிற்காக 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வந்த நிலையில், இந்த நீண்ட பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், சானியா மிர்சா 2023 மார்ச் 05 ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் டென்னிஸ் மைதானத்தில், தனது இறுதி போட்டியை விளையாடி விட்டு, ஆனந்த கண்ணீருடன் தனது தொழில் வாழ்க்கையை விட்டு விடைபெற்றார்.
பெண்கள் ஒருதுறையில் சாதனை புரியும் போது பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வதுண்டு. அப்படி தான் சானியா மிர்சாவும் ஏகப்பட்ட பிரச்சனைகளையும், சவால்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, வரலாற்றில் இடம் பெறும் வகையில் சாதித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சானியா மிர்சாவின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
சானியா மிர்சா 1986 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் இம்ரான் மிர்சா, நசீமா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பின் இவரது குடும்பம் ஹைதராபாத்திற்கு குடிப்பெயர்ந்தது. சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா ஒரு பத்திரிக்கையாளர். சானியா மிர்சா 6 வயது முதலாக டென்னிஸ் விளையாடி வருகிறார்.
சானியா மிர்சாவின் முதல் பயிற்சியாளர் பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியின் தந்தையான கிருஷ்ணா பூபதி ஆவார். அதன் பின் அவர் பயிர்ச்சியானர் ரோஜர் ஆண்டசனிடம் டென்னிஸை கற்றுக் கொண்டார்.

சானியா மிர்சாவின் படிப்பு
சானியா மிர்சா ஐதராபாத்தில் உள்ள நாசர் பள்ளியில் பயின்றார். அதன் பின் ஐதராபாத்தில் உள்ள புனித மேரி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை படித்தார். 2008 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ முனைவர் பட்டத்தை பெற்றார். சானியா மிர்சா டென்னிஸை தவிர, கிரிக்கெட் மற்றும் நீச்சலிலும் சிறந்தவர்.

சானியா மிர்சாவின் சாதனைகள் மற்றும் விருதுகள்
* சானியா மிர்சா ஆரம்ப காலத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடி வந்தார். ஆனால் அதன் பின் அவர் இரட்டையர் பிரிவிற்கு மாறினார் மற்றும் அது அவருக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது.
* சானியா மிர்சா தனது டீனேஜ் வயதில், அதாவது 2003-ல் விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
* 2004-ல் மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) பட்டத்தை வென்ற முதல் பெண்மணி ஆவார்.
* 2005 ஆம் ஆண்டில் மகளிர் டென்னிஸ் சங்கத்தால் 'சிறந்த புதுமுக வீரராக' அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும்..
* மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார் மற்றும் இவர் மூன்று முறை தனது கூட்டாளியான மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
* 2004-ல் இவர் அர்ஜுனா விருதையும், 2015-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும், 2016-ல் பத்ம பூஷன் விருதையும், பெற்றார்.
* 2009-ல் ஆஸ்திரேலியன் ஓபனில் மகேஷ் பூபதியுடன் இணைந்து முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். மேலும் இவர் 2009-ல் ஆஸ்திரேலியன் ஓபன், 2012-ல் பிரெஞ்சு ஓபன் மற்றும் 2014-ல் யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றார்.
* டைம்ஸ் இதழின் 2016 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.
* தெலுங்கானா மாநிலத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
* சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், அதில் மூன்று பெண்கள் இரட்டையர் மற்றும் மூன்று கலப்பு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.
* தெற்காசியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்.

சானியா மிர்சா குறித்த சர்ச்சைகள்
* சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்ததால், அப்போது இந்தியாவிற்கு எதிரானவர் என்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார்.
* டென்னிஸ் விளையாடும் போது சானியா மிர்சா குட்டை பாவாடை அணிவார். சானியா மிர்சா முஸ்லீம் என்பதால், சில முஸ்லீம் மத குழுக்களால் இந்த குட்டை பாவாடைக்காக அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளானார்.
* 2008 ஆம் ஆண்டு சானியா மிர்சாவின் போட்டோ ஒன்று சர்ச்சையை கிளப்பியது. அது என்னவெனில், டென்னிஸ் போட்டியின் போது, இந்திய தேசிய கொடிக்கு அருகில் உள்ள மேசையில் கால் நீட்டி சானியா ஓய்வெடுப்பது போன்ற போட்டோ. இந்த போட்டோவால் சமூக செயற்பாட்டாளர் சானியா மிர்சா தேசிய கொடியை அவமதித்ததாக, அவர் மீது வழக்கு தொடுத்தார்.



Click it and Unblock the Notifications