Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சனி வக்ர நிவர்த்தி: அக்டோபரில் இருந்து சனி பகவான் இந்த 3 ராசிகளுக்கு நிறைய தொல்லைகளை தருவாராம்...
மகர ராசியில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகரத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நாளில் தான் தந்தேராஸ் பண்டிகை, அதாவது தீபாவளியின் முதல் ஆரம்பப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களைத் தருவார். அதாவது நல்ல செயல்களை செய்தால், நற்பலன்களையும், மோசமான செயல்களை செய்தால் அதற்கான தண்டனையையும் தருவார். இந்த சனி கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியது. இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல எடுத்து கொள்ளும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

அந்த வகையில் 2022 ஏப்ரல் மாதத்தில் சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் வக்ர நிலையில் மகர ராசியில் பயணிக்கத் தொடங்கினார். சனியின் இந்த வக்ர நிலையால், ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்தாஷ்டம சனி நடப்பவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இந்நிலையில் வக்ர சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

2022 அக்டோபரில் சனி பெயர்ச்சி எப்போது?
மகர ராசியில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகரத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நாளில் தான் தந்தேராஸ் பண்டிகை, அதாவது தீபாவளியின் முதல் ஆரம்பப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் பெறும் ராசிகள்
சனி பகவான் தற்போது மகர ராசியில் வக்ர நிலையில் உள்ளார். இதனால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை சனி நடக்கும். மறுபுறம் அஷ்டம மற்றும் அர்தாஷ்டம சனியின் தாக்கம் கடகம் மற்றும் விருச்சிக ராசியில் இருக்கும். பொதுவாக சனி வக்ரமாக இருக்கும் காலம் வேதனை நிறைந்ததாக இருக்கும். அதுவும் ஏழரை சனி மற்றும் சனி தையாவால் பாதிக்கப்பட்டவர்கள் நிதி தொடர்பான, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனையால் அவதிப்படக்கூடும். ஆனால் இந்த சனி வக்ர நிவர்த்திக்கு பின் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் இதுவரை சந்தித்த பிரச்சனைகளில் இருந்து சற்று நிவாரணம் பெறுவார்கள்.

சனி வக்ர நிவர்த்திக்கு பின் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!
கன்னி
சனி வக்ர நிவர்த்தியாவதால் கன்னி ராசிக்காரர்கள் அதிக தொல்லைகளை சந்திக்க நேரிடும். கன்னி ராசியின் 5 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இந்த 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், கன்னி ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் சற்று கடினமாக இருக்கும். அதோடு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

தனுசு
சனி வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்காரர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். தனுசு ராசியின் 2 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. எனவே 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தியாவதால், இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் அதிக மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

கடகம்
சனி வக்ர நிவர்த்தியடைவதால் கடக ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் திருமணமானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இது மட்டுமின்றி, சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சனி பகவானின் மோசமான தாக்கத்தைக் குறைக்கும் பரிகாரங்கள்
* தினமும் சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
* சனிக்கிழமைகளில் கருப்பு எள்ளு, கருப்பு உளுந்து, கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம்.
* சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் சனி பகவானை நினைத்து கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
* அனுமனை தினமும் வணங்குங்கள்.
* சனிக்கிழமை அன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications