Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
Kumbam Sani Peyarchi Palangal 2023: கும்ப ராசிக்கு 2023 சனிப்பெயர்ச்சியால் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு மற்றும் சங்கடங்களை சந்திக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக செயல்படுத்த வேண்டும்.
ஒருவரின் கர்மாவிற்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராசியை மாற்றுகிறார். அதுவும் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கும் வரும் சனி, அந்த ராசியில் 2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். சனி பகவான் கும்ப ராசியின் லக்ன வீடு மற்றும் 12 ஆவது வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

ஆகவே 2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு மற்றும் சங்கடங்களை சந்திக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக செயல்படுத்த வேண்டும். பொதுவாக சனி பகவான் ஒரு ராசிக்கு வந்தால், வாழ்க்கை என்றால் என்னவென்பதை புரிய வைத்துவிடுவார். எனவே முன்பு செய்த தவறை இக்காலத்தில் செய்யாதீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எப்போதும் அமைதியையும், நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்க வேண்டும். உங்களால் எந்த முடிவையும் எடுக்கமுடியாவிட்டால், தெளிவு பெற உங்கள் நலம் விரும்பிகளின் உதவியைப் பெற்றிடுங்கள்.
நற்பலன்கள் என்று பார்த்தால், சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் நற்பெயர், செல்வம் மற்றும் மதிப்பு உயரும். சில கும்ப ராசிக்காரர்கள் வேலையின் காரணமாக வெளிநாட்டுக்கு இடம் பெயர்வார்கள். செலவுகள் அதிகமாக இருந்தாலும், இரண்டையும் சமன் செய்ய நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். இப்போது 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை சற்று விரிவாக காண்போம்.

2023 சனிப்பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
2023 சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக, வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். தொழிலில் மெதுவான முன்னேற்றம் ஏற்படலாம். இருக்கும் வேலையை விட நினைத்தால், ஒரு நல்ல வேலையில் கையில் வைத்துக் கொண்டு பின்னரே விட வேண்டு. தற்போதைய காலகட்டத்தை கற்று கொள்வதற்கான காலமாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைகள் அனைத்தையும் ஒரு பாடமாக கருதுங்கள். எதற்கும் அதிகமாக கவலைப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.

2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் காதல் மற்றும் உறவுகள் எப்படி இருக்கும்?
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால், அது உறவில் நிறைய நன்மைகளை செய்யும். அன்புக்குரியவர்கள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக இருப்பார்கள். இதனால் பிரச்சனைகள் ஏற்படும். பல விஷயங்களால் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, நம்பிகையற்றவராக உணர்வீர்கள். முடிந்தவரை சமரசத்தைக் கடைப்பிடியுங்கள். திருமணமாகாதவர்கள் யாரையும் இக்காலத்தில் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள். திருமணம் செய்ய இது உகந்த காலம் அல்ல. மற்றவர்கள் இக்காலத்தில் உங்களை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துவார்கள்.

2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
திருமணமான தம்பதிகள் தங்கள் உறவில் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். இக்காலத்தில் அதிக கோபம் கொள்வீர்கள். அப்போது சற்று அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இது சரியான காலம் அல்ல. நீங்கள் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இக்காலத்தில் உங்களை சிலர் ஏமாற்றலாம். அந்த பொறியில் சிக்கிவிடாதீர்கள்.

2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் நிதி நிலை எப்படி இருக்கும்?
கும்ப ராசிக்காரர்கள் செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்களில் சில பின்னடைவுகள் இருக்கலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன்களை வாங்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் பணம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். புதிய வணிகம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான அனைத்து முன்மொழிவுகளையும் சற்று நிறுத்தி வையுங்கள். முதலீடு செய்வதாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இது சனி பகவானை மகிழ்வித்து, கெடுபலனைக் குறைக்கும்.

2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கல்வி எப்படி இருக்கும்?
கும்ப ராசிக்கார மாணவர்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இக்காலத்தில் பல தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஆர்வம் காட்டினால் ஜொலிப்பீர்கள். உங்களுக்கு ஒன்று சரியாக புரியாவிட்டால், ஆசிரியரிடம் கேளுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டோர் வெற்றி பெறுவார்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் சரியான பல்கலைகழகத்தை கண்டறிந்து சேர வேண்டும்.

2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் அதிகம் ஈடுபட வேண்டும். காரமான உணவுகளை அளவாக சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முதுகு பகுதியில் பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். சிறந்த ஆரோக்கியத்திற்காக பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

2023 சனிப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கான பரிகாரங்கள்
* துப்புரவு பணியாளர்களுக்கு காலணிகளை வாங்கி கொடுங்கள்.
* தினமும் "ஓம் நிலஞ்சன சமபாசம் ரவி புத்ரம் யமக்ரஜம் சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஷநேச்சரம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.
* வீட்டில் வேலை செய்வோரை மோசமாக நடத்தாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications