Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சமசப்தம யோகத்தால் ஆகஸ்ட் 17 வரை இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. ஏன்னா வேலை போக வாய்ப்பிருக்கு...
2022 ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வந்து, சனிக்கு நேர் எதிராக இருக்கும் போது, சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. அதுவும் சனி வக்ர நிலையில் மகர ராசியில் பயணிக்கிறார். இது நல்லதல்ல.
வேத ஜோதிடத்தில் சனி மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சூரியன் மற்றும் சனி, தந்தை மற்றும் மகனாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் பகை உணர்வு கொண்டவர்கள். அதாவது எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன. இதில் சூரியன் 2022 ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்கு சென்றார். சூரியன் கடக ராசிக்குள் நுழைந்ததால், சூரியனும், சனியும் நேருக்கு நேர் உள்ளன. இந்நிலையானது 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருக்கும்.

ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, சூரியன் மற்றும் சனியின் பார்வை தொடர்பானது நற்பலன்களை விட பல அசுப பலன்களைக் கொடுக்கும். இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 17 வரை சற்று சோதனை நிறைந்த காலமாக இருக்கும்.

சூரியன்-சனி அசுப யோகம்
2022 ஜூலை 16 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வந்து, சனிக்கு நேர் எதிராக இருக்கும் போது, சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. அதுவும் சனி வக்ர நிலையில் மகர ராசியில் பயணிக்கிறார். இது நல்லதல்ல. இந்த வேளையில் சனி-சூரியனின் சமசப்தம யோகம் உருவாகியிருப்பது, பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கும். வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகும். மனதில் விரக்தி ஏற்படும். குறிப்பாக இந்த யோகத்தால் நான்கு ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வீட்டில் சண்டைகள் அதிகம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூட பிரச்சனைகளை சந்திக்கலாம்.

சிம்மம்
சமசப்தம யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் வேலை தொடர்பான டென்சன் அதிகம் இருக்கும். முதலீட்டில் நஷ்டம் ஏற்படலாம். குடும்பம் மற்றும் தம்பதியருக்குள் முன்பை விட அதிகமாக சண்டைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

தனுசு
நீங்கள் தனுசு ராசிக்காரர்களாக இருந்தால் ஆகஸ்ட் 17 வரை எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இந்த காலத்தில் பண இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேலை பறிபோக வாய்ப்புள்ளது. முதலீடுகளால் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. உடல்நல பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சமசப்தம யோகத்தால் கையில் போதுமான பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். பண இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கவனமாக வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

துன்பங்களைக் குறைக்கும் சனி, சிவ வழிபாடு
சனி தோஷத்தைக் குறைக்க சிறந்த வழி சனி வழிபாடு தான். சூரியன் மற்றும் சனியினால் சந்திக்கும் மோசமான விளைவுகளைக் குறைக்க சனி மற்றும் சிவபெருமானை வழிபடுவது நன்மை பயக்கும். அதுவும் சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம் சனி தோஷம் குறையும்.



Click it and Unblock the Notifications