Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
வக்ர புதன் பெயர்ச்சியால் புத்தாண்டின் தொடக்கத்தில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஆண்டின் கடைசி நாளில் புதன் வக்ரமாவதால், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி நாளில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். வேத ஜோதிடத்தில் புதன் தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகிய அனைத்தையும் கொண்டிருப்பார். அதுவே புதன் பலவீனமான நிலையில் இருந்தால், மந்தமாக இருப்பார்.

2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்லும் புதன், 2023 ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, 2023 பிப்ரவர் 07 ஆம் தேதி மகர ராசிக்கு செல்வார். இப்படி ஆண்டின் கடைசி நாளில் புதன் வக்ரமாவதால், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் உங்களின் பேச்சில் கசப்பு நிறைந்திருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்பத்தினர்களுடன் சண்டை போடும் சூழலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஊடகம், எழுத்துத்துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் புதனின் நிலையால் வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். யாருக்காவது கடனாக பணத்தைக் கொடுத்திருந்தால், அதை இக்காலத்தில் திரும்ப பெற முடியாது. இந்த காலகட்டத்தில் நண்பர்களின் உதவி கிடைக்காததால், சற்று மனம் வருத்தமடைய நேரிடும். உங்கள் மாமனார்-மாமியாருடன் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். எனவே இந்த புதன் பெயர்ச்சிக்கு பின், மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதி தொடர்பான வேலையை செய்பவர்களின் பணியில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கையில் சில பதட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
