Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?
ஆரோக்கியமான காதலுக்கு கடின உழைப்பு என்பது கண்டிப்பாக தேவை. எவ்வளவு உறுதியான காதலிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெகிழ் உறவுகள் என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒன்றாகும்.
ஆரோக்கியமான காதலுக்கு கடின உழைப்பு என்பது கண்டிப்பாக தேவை. எவ்வளவு உறுதியான காதலிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெகிழ் உறவுகள் என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒன்றாகும். ஏனெனில் நெகிழ் உறவுகளுக்கு மட்டும்தான் காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிவுணர்வுடன் இருப்பது, ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவது, விஷயங்கள் மோசமாக நடக்கும்போதும் சரி, சரியாக நடக்கும்போதும் சரி ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது, அவரவர் எல்லைகளை மதிப்பது போன்ற குணங்கள் இருக்கும்.

பிடிவாதமாக இருபவர்களுக்கு ஒருபோதும் இந்த நெகிழ் உறவு கிடைக்க வாய்ப்பில்லை, ஏனெனில் காதலுக்கு அடிப்படை தேவையே விட்டுக்கொடுப்பதுதான். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த நெகிழ் உறவு கிடைக்கும் வரம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை மதித்து காதலிபார்கள் என்று பார்க்கலாம்.

சிம்மம்
காதலில் பிரச்சினைகள் ஏற்படும் போது சிம்ம ராசிக்காரர்கள் சோர்ந்து போகாமல் தங்கள் துணையுடன் சேர்ந்து அதனை ஆலோசித்து அதனை விரைவாக சரிசெய்ய முயற்சிப்பார்கள். எந்த பிரச்சினையையும் இவர்கள் தானாக சமாளிக்க முயற்சி செய்ய மாட்டார்கள் தங்கள் துணையுடன்தான் சேர்ந்து தீர்க்க முயலுவார்கள். அது எவ்வளவு எளிதான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது உறவை பாதிக்கும் என்று அறிவார்கள். பிரச்சினைகளை சரிபண்ண இருவரும் தேவை என்பதை இவர்கள் நன்றாக அறிவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றும் வரத்தை பெற்றவர்கள், இது அவர்களின் காதலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க பெரிதும் உதவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நெகிழ்ச்சியான உறவை கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் இவர்கள் ஒருபோதும் தங்களின் துணை தங்களுடைய மனதை படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை பற்றிய தெளிவுடன் இருக்கிறார்கள், தான் வருத்தப்படும் போது ஒருபோதும் அதனை மறைத்து வைக்கமாட்டார்கள் உடனடியாக தங்கள் துணையிடம் கூறிவிடுவார்கள். வெளிப்படையாக இருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கென தனி தைரியம் வேண்டும். தங்களின் துணை தங்களின் வருத்தத்தை தனக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். வெளிப்படையாக இருப்பதன் மூலம் தங்களின் துன்பத்தை தங்கள் துணை அறியவில்லை என்பதால் ஏற்படும் மனக்கசப்பைத் தவிர்ப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நெகிழ்வானவர்கள், எவ்வளவு இருள் சூழ்ந்த சூழ்நிலையிலும் இவர்களால் சொந்த காலில் நிற்கமுடியும். அவர்கள் ஒரு நெகிழ்திறன் உறவை உருவாக்கும் வழிகளில் ஒன்று, அவர்கள் எப்போதும் ஒரு சூழ்நிலையில் நகைச்சுவை அல்லது நல்ல விஷயங்களை பார்ப்பதாகும். பதட்டத்தை தவிர்ப்பதற்கும், வாக்குவாதங்களை கட்டுபாட்டில் வைத்துக்கொள்வதற்கும் சிரிப்பு ஒரு மிகசிறந்த உத்தி ஆகும். இதனை மேஷ ராசிக்காரர்கள் நன்கு அறிவார்கள். தங்கள் துணையுடனான பிரச்சினையை எப்பொழுதும் சிரிப்புடன் அணுகுவதால் இவர்கள் காதலில் பிரிவு என்பது இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மிகவும் முக்கியமானதாகும், எனவே அவர்களின் உறவில் ஏற்படக்கூடிய எந்தவொரு அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.கடக ராசிக்காரர்கள் காதலில் சிறந்து விளங்க காரணம் முயற்சி செய்யும் சூழ்நிலைகளில் கூட இவர்கள் தங்களின் பாதிப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவர்களிடம் கேள்விக்கான பதில் இல்லையென்றால் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் புத்திசாலிகள், தள்ளாடாதவர்கள், இவர்கள் ஒருபோதும் தங்கள் துணை மீது பழிசுமத்த மாட்டார்கள். அவர்கள் தங்கள் துணைக்கும் சேர்த்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள், தங்கள் உறவில் ஏற்படும் எந்த பிரச்சினைகளுக்கும் தங்கள் துணை மீது இவர்கள் குற்றம் சாட்டமாட்டார்கள். தங்கள் மீது தவறில்லை என்றாலும் இவர்கள் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள், சில நேரங்களில் பெருந்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

துலாம்
சில நேரங்களில் நீங்கள் உதவி கேட்பீர்கள் என்று இவர்கள் அறிவார்கள் அதனை செய்யவும் செய்வார்கள். இவர்கள் ஒரு தியாகியைப் போல செயல்படமாட்டார்கள், தங்கள் கூட்டாளருக்கு எதிராக வளர்ந்து வரும் மனக்கசப்பு உருவாக்கும் அதே வேளையில் அதனை சரிசெய்ய தேவையான அனைத்தையும் இவர்கள் செய்வார்கள். தங்கள் துணையுடன் சேர்ந்து இருப்பது தங்கள் உறவை பலப்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரைகள் தேவைப்படலாம் அதனையும் இவர்கள் தயங்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications