For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதில் வித்தியாசம் ஒன்று உள்ளது - அது என்ன தெரியுமா?

சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக் கொடியானது கம்பத்தில் ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியானது அவிழ்க்கப்படும். என்ன புரியவில்லையா?

|

ஜனவரி மாதம் வந்தாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது குடியரசு தினம் தான். இந்தியாவின் மிகவும் முக்கியமான தேசிய விழாக்களில் ஒன்று தான் குடியரசு தினம். ஒவ்வொரு ஆண்டும் இது மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 74 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டதை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

Republic Day 2023: Difference Between Flag Unfurling And Flag hoisiting In Tamil

இந்த குடியரசு தினத்தன்று சுதந்திர தினத்தைப் போன்றே தான் கொடி ஏற்றுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. ஆம், சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக் கொடியானது கம்பத்தில் ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியானது அவிழ்க்கப்படும். என்ன புரியவில்லையா? இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கொடி ஏற்றுவது

கொடி ஏற்றுவது

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமரால் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இந்நாளில் கொடி ஏற்றும் போது, கொடியானது கம்பத்தில் கீழ்பகுதியில் கட்டப்பட்டு, பின் பாரத பிரதமரால் தேசிய கொடி மேலே ஏற்றப்படுகிறது. இது இந்தியா பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த அடையாளத்தைக் குறிக்கும் செயலாகும்.

கொடி அவிப்பது

கொடி அவிப்பது

குடியரசு தினமானது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது. இந்த குடியரசு நாளில் இந்திய குடியரசு தலைவர் ராஜ்பாத் என்னும் கர்தவ்ய பாதையில் கொடியேற்றுவார். அதாவது, குடியரசு நாளில் இந்திய கொடியானது கம்பத்தின் மேல் ஒரு மூட்டையாக கட்டப்படும். பின் குடியரசு தலைவர் அந்த மூட்டையை அவிழ்த்து, கொடியை பறக்கவிடுவார்.

யார் கொடியை ஏற்றுவார், யார் கொடியை அவிழ்ப்பார்?

யார் கொடியை ஏற்றுவார், யார் கொடியை அவிழ்ப்பார்?

இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி யாரும் இல்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜனரலாக மவுண்ட்பேட்டன் பிரபு இருந்தார். இது தான் ஜனாதிபதியின் பதவிக்கு இணையானது. ஆனால் இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் தான் ஏற்ற முடியும் என்பதால், அப்போது முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு கொடியை ஏற்றினார். அன்று முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்தியாவின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு ஏற்றுக் கொண்ட குடியரசு தினத்தன்று, இந்தியாவின் முதல் குடிமகனாக, குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா ஏற்கனவே சுதந்திரம் பெற்றதால், முதல் குடியரசு தினத்தன்று குடியரசு தலைவராக பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் அவர்கள் கொடியை அவிழ்த்து வைத்தார். அப்போது முதல் இன்று வரை குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவிழ்க்கப்பட்டு வருகிறது.

இவ்விரு நிகழ்வுகளும் எங்கு நடைபெறும்?

இவ்விரு நிகழ்வுகளும் எங்கு நடைபெறும்?

குடியரசு தினத்தன்று, அதாவது ஜனவரி 26 ஆம் தேதி புது தில்லியில் உள்ள ராஜ்பாத் என்று அழைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் இந்திய குடியரசு தலைவர் தேசியக் கொடியை அவிழ்ப்பார். அதே சமயம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் இந்திய தேசிய கொடியை கம்பத்தின் கீழிருந்து கொடியை மேலே ஏற்றுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Republic Day 2023: Difference Between Flag Unfurling And Flag hoisiting In Tamil

Republic Day 2023: What is the difference between hoisting and unfurling of the Indian flag? Read on to know more in detail...
Desktop Bottom Promotion