Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தட்டுல 3 சப்பாத்தி வைத்து ஏன் பரிமாறக்கூடாது?அதற்கு பின்னால் இருக்கும் ஷாக்கான காரணம் என்ன தெரியுமா?
இந்து மதத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயரில் ஒரு சடங்கு செய்யப்படுகிறது, அதன்படி த்ரயோதசி சடங்குகளுக்கு முன் 3 ரொட்டி அல்லது சப்பாத்தி தட்டில் வைக்கப்படுகின்றன.
இந்தியா பல்வேறு கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளை கொண்ட பூமியாக உள்ளது. இந்து மதத்தின் படி, பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தையும் உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் அழிப்பதற்கு திரிதேவ் அல்லது மும்மூர்த்திகள் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்) பொறுப்பு. எனவே, தர்க்கரீதியாக, மூன்றை ஒரு தீய எண்ணாக பார்க்கக்கூடாது. ஆனால், சில விஷயங்கள் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டவை, மற்றவை நம் அச்சங்களை அடிப்படையாகக் கொண்டவை. பல நேரங்களில், சில விஷயங்கள் அபசகுணமாகக் கருதப்படுகின்றன.

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் பல நம்பிக்கைகளில் ஒன்று, ஒரே நேரத்தில் மூன்று ரொட்டி/சப்பாத்திகளை நம் தட்டில் வைக்கக் கூடாது. ஏன் 3 ரொட்டிகள் தட்டில் ஒன்றாக வைக்கப்படுவதில்லை என்பதற்குப் பின்னால் உள்ள மத மற்றும் அறிவியல் காரணங்களை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

3 ரொட்டி அல்லது சப்பாத்தி
வழிபடும் போது 3 என்ற அளவில் எந்த பொருளும், உறுப்பும் எடுக்கப்படுவதில்லை. எந்த வீட்டிலும் அல்லது உணவகத்திலும் ஒரு தட்டில் ஒரே நேரத்தில் மூன்று ரொட்டிகள் பரிமாறப்படுவதில்லை என்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில், 3 மிகவும் மோசமான எண்ணாக கருதப்படுகிறது. இதே கருத்தைப் பின்பற்றி, 3 என்ற எண்ணில் உணவு பரிமாறும் போது, அதை உட்கொள்பவருக்கு தீய விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இந்த காரணத்தினால்தான் நாம் சப்பாத்தியை பரிமாறும் போது, அது 2 இன் பெருக்கல் அல்லது 1 ஆக இருக்கும்.

இறந்தவரின் உணவு
இந்து மதத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயரில் ஒரு சடங்கு செய்யப்படுகிறது, அதன்படி த்ரயோதசி சடங்குகளுக்கு முன் 3 ரொட்டி அல்லது சப்பாத்தி தட்டில் வைக்கப்படுகின்றன. இந்து நம்பிக்கைகளின்படி, இறந்தவருக்கு மூன்று ரொட்டிகள் கொண்ட ஒரு தட்டு படையலிடப்படுகிறது. அதை பரிமாறுபவர் மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதைத் தவிர வேறு யாரும் இந்தத் தட்டைப் பார்க்கக் கூடாது. எனவே உயிருடன் இருக்கும் எவருக்கும் தட்டில் மூன்று ரொட்டிகளை வழங்கக் கூடாது என்று கூறப்படுகிறது.

மனதில் பகையை உண்டாக்குகிறது
இந்த எண் 3 கோட்பாடு தொடர்பாக மற்றொரு நம்பிக்கை உள்ளது. எந்த உணவையும் எண் 3 இல் பரிமாறக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், அது பரிமாறுபவர் மீது பகை உணர்வைத் தூண்டுகிறது. மேலும் நியாயமற்ற சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

தர்க்கரீதியான காரணம்
3 சப்பாத்திகள் சாப்பிடுவது ஒரு நபரின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம் என்பது தர்க்கரீதியான காரணம். எனவே ஒரு கிண்ணம் சாதம், பருப்பு, காய்கறிகள் மற்றும் சில சாலட்களுடன் பரிமாறப்படும் 2 சப்பாத்திகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. இது முழு உணவாகக் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications