Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
ரக்ஷா பந்தன் அன்று உங்கள் சகோதரியின் ராசிப்படி பரிசை கொடுத்தால், அவங்க சந்தோஷம் நிலைக்குமாம்..
ஜோதிடத்தின் படி, ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது சகோதரர்கள் தங்கள் சகோதரியின் ராசிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கினால், அது சகோதரிக்கு நன்மை பயக்கும் மற்றும் மங்களகரமானதும் கூட.
ரக்ஷா பந்தன் பண்டிகையானது சகோதரர் மற்றும் சகோதரிகளின் அன்பிற்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 11, வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர்கள் நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கும் ஒரு பாதுகாப்பு நூலை கட்டுவார்கள். இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது.

அதே நேரத்தில், சகோதரி தனது சகோதரருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகம் இட்டு, அவருக்கு இனிப்பை ஊட்டுவார்கள். பதிலுக்கு சகோதரர்கள் தங்களின் சகோதரிக்கு பரிசு கொடுப்பார். ஜோதிடத்தின் படி, சகோதரர்கள் தங்கள் சகோதரியின் ராசிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கினால், அது சகோதரிக்கு நன்மை பயக்கும் மற்றும் மங்களகரமானதும் கூட. இந்த வருடம் நீங்கள் உங்கள் சகோதரிக்கு அவரது ராசிக்கு ஏற்ப பரிசளிப்பதன் மூலம் இப்பண்டிகை இன்னும் சிறப்பானதாக மாறும். இப்போது ராசிக்கு ஏற்ற பரிசுகள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
உங்கள் சகோதரியின் ராசி மேஷம் என்றால், உங்கள் சகோதரிக்கு ராக்கி பரிசாக சிவப்பு நிற ஆடைகளை பரிசளியுங்கள். இது தவிர சிவப்பு நிற பொருட்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ரிஷபம்
உங்கள் சகோதரியின் ராசி ரிஷபம் என்றால், அவருக்கு ராக்கி பரிசாக வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகள், முத்து நகைகள், வாசனை திரவியங்களை பரிசளிக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசி உங்கள் சகோதரியின் ராசி என்றால், நீங்கள் அவர்களுக்கு பச்சை நிற ஆடைகள் மற்றும் இந்த நிறத்தில் வேறு ஏதேனும் பொருட்களை வாங்கி பரிசாக கொடுக்கலாம்.

கடகம்
உங்கள் சகோதரியின் ராசி கடகம் என்றால், வெள்ளை நிற ஓடும் குதிரை அல்லது வெள்ளை நிற உடை அல்லது வெள்ளி நகைகளை பரிசாக கொடுக்கலாம்.

சிம்மம்
உங்கள் சகோதரி சிம்ம ராசியாக இருந்தால், அவர்களுக்கு குங்குமப்பூ நிற ஆடைகள், தங்க நகைகள் போன்றவற்றை பரிசாக கொடுக்கலாம்.

கன்னி
உங்கள் சகோதரியின் கன்னி என்றால், அவருக்கு பச்சை நிற ஆடைகளை வாங்கி பரிசாக கொடுக்கலாம். இது தவிர, பச்சை நிறமுடைய பிற பொருட்களைக் கொடுப்பதும் நல்லது.

துலாம்
துலாம் ராசி உங்கள் சகோதரியின் ராசியெனில், அவருக்கு நீங்கள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடைகளை வழங்கலாம். இல்லாவிட்டால் வாசனை திரவியங்கள், முத்து நகைகளையும் பரிசாக கொடுக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசி உங்கள் சகோதரிக்குரிய ராசி என்றால், நீங்கள் அவருக்கு சிவப்பு நிற ஆடைகளை அல்லது சிவப்பு நிறத்திலான வேறு எந்த பொருளையும் பரிசாக கொடுக்கலாம்.

தனுசு
உங்கள் சகோதரி தனுசு ராசிக்காரர் என்றால், அவருக்கு மஞ்சள் நிற ஆடைகளை ராக்கி பரிசாக கொடுக்கலாம். இல்லையெனில் மஞ்சள் நிறம் கொண்ட வேறு எந்த பொருட்களையும் கொடுக்கலாம்.

மகரம்
மகர ராசி உங்கள் சகோதரியின் ராசியெனில், அவருக்கு நீங்கள் கருப்பு நிற ஆடையை ராக்கி பரிசாக கொடுக்கலாம். இது தவிர, கருப்பு நிற பொருட்களையும் பரிசாக வழங்கலாம்.

கும்பம்
உங்கள் சகோதரி கும்ப ராசிக்காரர் என்றால், அவருக்கு நீங்கள் நீல நிறத்திலான பொருட்களை ராக்கி பரிசாக கொடுக்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர் உங்கள் சகோதரியாக இருந்தால், அவருக்கு நீங்கள் ராக்கி பரிசாக மஞ்சள் நிற ஆடைகளை கொடுக்கலாம். இல்லாவிட்டால் மஞ்சள் நிற பொருட்களை வழங்கலாம்.



Click it and Unblock the Notifications