Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
மேஷத்தில் ராகு-சுக்கிர சேர்க்கை: ஏப்ரல் 06 வரை இந்த 3 ராசிக்கு நல்ல லாபகரமானதா இருக்கும்...
தற்போது மேஷ ராசியில் ராகு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளன. இந்த சேர்க்கையானது ஏப்ரல் 06 ஆம் தேதி வரை இருக்கும். இந்த ராகு-சுக்கிர சேர்க்கை காலத்தில் 3 ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
Rahu Venus Conjunction In Aries On March 2023: ஜோதிட சாத்திரத்தின் படி, கிரக பெயர்ச்சிகளும், கிரக சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரக சேர்க்கைகளின் போது சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் கெடுபலனையும் பெறலாம். ஆனால் அது அனைத்தும் அந்த கிரக சேர்க்கைகள் எந்த வீட்டில் நிகழ்ந்துள்ளன என்பதைப் பொறுத்தது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் இருந்து நிழல் கிரகமான ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைந்தார். தற்போது மேஷ ராசியில் ராகு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளன. இந்த சேர்க்கையானது ஏப்ரல் 06 ஆம் தேதி வரை இருக்கும். இந்த ராகு-சுக்கிர சேர்க்கை காலத்தில் 3 ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எம்மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் ராகு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் நம்பிக்கை நிறைந்து இருப்பார்கள். உங்களின் வசதிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். கூட்டுத் தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, வியாபாரத்தை விரிவாக்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். மேலும் பழைய முதலீடுகளில் இருந்து இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். வீடு, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் தாயுடனான உறவு மேம்படும். அவரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
