Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
ராகு, சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப்போகுது...
சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும் போது, மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகம் இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் மிகவும் மோசமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சக்தி, மரியாதை, தந்தை, உயர் பதவி, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். இது தவிர சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமை உகந்த நாளாகும். செப்டம்பர் மாதத்தில் சூரியனின் ராசி மாற்றம் நாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதோடு மட்டுமின்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

2022 செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி
சூரியன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த கன்னி ராசிக்கு சூரியன் காலை 07.11 மணிக்கு செல்கிறார். இந்த கன்னி ராசியில் சூரியன் ஒரு மாதம் காலம் பயணிப்பார். இந்த கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் செல்வார்.

ராகு-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்
சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும் போது, மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகம் இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் மிகவும் மோசமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் போது 6 மற்றும் 8 ஆவது வீடுகளில் ஏதேனும் இரண்டு கிரகங்கள் இருக்கும். ராகு மற்றும் சூரியனின் உறவால் ஒரு நாட்டில் பெரிய மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு வெள்ளம், பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்.
இப்போது ராகு சூரியனால் உருவாகும் யோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலை தேடுபவர்கள் மற்றும் அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் அற்புதமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முக்கியமாக உடல் அல்லது மன ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அவற்றை இக்காலத்தில் எளிதில் அகற்றுவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை, உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். வருமான ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலம் நல்ல பண வரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியும், நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு மேம்பட வீட்டில் பெரும்பாலான நேரத்தை செலவிடுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
