Latest Updates
-
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
புரட்டாசி ராசிபலன்கள் 2019: உங்களுக்கு விபரீத ராஜயோகத்தால் வருமானம் கொட்டப்போகுது
புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கூடவே புதன், சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன.
புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் தெய்வீக திருவிழாக்கள் நடைபெறும் மாதம், நிறைய பண்டிகைகளை, நவராத்திரி விழாக்கள் நடைபெறும் மாதம். புதனோட ராசியான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். புதன் தனது ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்று அமர்ந்திருக்க, இதனால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கிறது.
மேஷம், துலாம், கும்பம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசியில் புதனால் விபரீத ராஜயோக அமைப்பு உருவாகி மாத ஆரம்பத்தில் வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரனால் மாளவியா யோக அமைப்பும், விபரீத ராஜயோக அமைப்பும் ஏற்பட்டு செல்வாக்கு அதிகரிக்கப் போகிறது. இந்த மாதம் பணவருமானம், செல்வத்தால் செழிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் நவகிரகங்களில் ராகு மிதுனம் ராசியிலும் சனியோடு கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். குருபகவான் விருச்சிகத்தில் சஞ்சரிக்கின்றனர். தினசரி நகரும் சந்திரன் மேஷத்தில் மாதத்தை துவங்குகிறார். சிம்மத்தில் செவ்வாய் இருக்க இதுநாள் வரை கூட்டணியில் இருந்த சூரியன் கன்னி ராசிக்கு நகர்கிறார். கூடவே புதன், சுக்கிரன் சஞ்சாரம் உள்ளது.
மாத பிற்பகுதியில் புதன் சுக்கிரன் கூட்டணி துலாம் ராசியில் அமைகிறது. நீசம் பெற்றிருந்த சுக்கிரன் இம்மாதம் துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி பணவருமானம், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
வீரமான மேஷ ராசிக்காரர்களே... ஆறாம் அதிபதியான புதன் இந்த மாதம் தனது ராசியான கன்னியில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்து விபரீத ராஜயோக அமைப்பைத் தருகிறார். திடீர் வருமானங்கள் மூலம் பணம் வரும். பாக்ய சனியின் பார்வை ஆறாம் வீட்டில் இருக்கும் கன்னி ராசியில் உள்ள கிரகங்கள் மீது விழுவதால் புதிய வேலைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய தெம்புகள் உற்சாகத்தை கொடுக்கும். வியாபாரத்தில் கவனமாக இருங்க. அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.
கலைத்துறையினருக்கு சுமார்தான. கொடுத்த கடன் திரும்ப வருவது சிரமம். ஆறாம் வீட்டில் கிரகங்கள் சஞ்சாரம் அஷ்டம குருவினால் இந்த மாதம் ரொம்ப ஆஹா ஓஹோ என்று இருக்காது. சாப்பாட்டு விசயத்தில கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க கண் பிரச்சினைகள் உடனே கவனிங்க. பாதிப்புகள் குறைய புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கவும்.

ரிஷபம்
உங்க ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதியுடன் இணைந்து நீசபங்க ராஜயோக அமைப்பை பெற்றுள்ளதால் உங்களுக்கு திடீர் வருமானங்கள் கிடைக்கும். பெண்களுக்கு அற்புதமாக இருக்கும். சந்திரன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முதல்வாரத்தில் உங்க ராசியிலேயே சந்திரன் உச்சம் பெறுகிறார்.
ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். இதனால் இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல பேரும் புகழும் கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும், திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க சுபமாக முடியும். அஷ்டம சனி கேதுவால் பிரச்சினை ஏற்பட்டாலும் குரு பார்வை கோடி புண்ணியம் என்பதால் உங்க ராசிக்கு கிடைக்கும் குரு பார்வை வளர்ச்சியை ஏற்படுத்தும்.

மிதுனம்
நான்காம் வீட்டில் ராசி நாதன் புதன் உச்சம் பெற்றிருக்க புத்திசாலித்தனம் அதிகம் ஜெயிக்கும். சுக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் இணைந்திருப்பதால் இந்த மாதம் அதிகம் கெடுதல் எதுவும் நடக்காது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிட்டு செய்யுங்கள். கண்டச்சனி கவலையை ஏற்படுத்தும். ஏழாம் வீட்டில் உள்ள சனி வேலையை கொடுப்பார். புதிய வேலையில் தைரியமாக சேருங்கள். நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு படிப்பு உற்சாகத்தை தரும். சூரியன் செவ்வாய் சேரும் போது முகத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். ஆறாம் வீட்டில் உள்ள குரு குடும்பத்தில் சில பிரச்சினைகளை தருவார். கணவன் மனைவி உறவு சண்டை சச்சரவுகள் வரலாம் அமைதியாக போங்க விட்டுக்கொடுத்துப்போனால் விரிசல்கள் வராது. புதன்கிழமை பெருமாளை வணங்கவும்

கடகம்
மூன்றாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி அற்புதமாக உள்ளது. இரண்டாம் அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் கிரகங்களுடன் சேருகிறார். குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். புதிய முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் வெற்றிகரமான மாதமாக அமையும். கடன் வாங்க வேண்டாம். அப்படியே கடன் வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒத்திவைக்கவும். வீடு மனை வாங்கும் போது யோசித்து வாங்குங்கள். அதேபோல வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக இந்த மாதம் வாங்க வேண்டாம். அரசு உத்யோகஸ்தர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். புரமோசன் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமாக உள்ளது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி அப்படி உள்ளது. சோதனைகள் பல கடந்து விட்டீர்கள். இனி எல்லாம் நல்லதாகவே அமையும். உங்க ராசி நாதன் இரண்டாம் வீடான கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடனும் நீசபங்கம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கிறார். பணவரவு அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சுப காரியங்கள் நடக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைகள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். செவ்வாய் சூரியனுடன் இணையும் போது முன்கோபம் அதிகமாக வரும் கோபத்தே குறைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதம் செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள். வேலுண்டு வினையில்லை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் கூட்டணி அற்புதமாக அமைந்துள்ளது. திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நடைபெறும். நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாக சில நல்ல விசயங்கள் நடக்கும். பெண்களால் பெண்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்கின்றன. சனிபகவான் உங்க ராசியை பார்க்கிறார். சில தடைகள், தாமதங்களை ஏற்படுத்துவார். குரு மூன்றாம் வீட்டில் இருப்பதால் செய்யும் முயற்சிகள் தோல்வியடையும். உங்களுக்கு வேலைக்காக செய்யும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். அரசு வேலைகள் முயற்சி செய்தால் கண்டிப்பாக கிடைக்கும். மனதை தளரவிட வேண்டாம். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். புதன்கிழமை பெருமாளை வணங்க முயற்சிகள் வெற்றியடையும்.

துலாம்
புரட்டாசி மாத துவக்கத்தில் விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன், சுக்கிரன் இணைந்திருக்க முதல்வாரத்திலேயே செவ்வாய் பெயர்ச்சியாகி மூன்று கிரகங்களுடன் இணைகிறார். விரைய ஸ்தானத்தில் விரைய ஸ்தான அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது விபரீத ராஜயோக அமைப்பை ஏற்படுத்துகிறார். திடீர் பணவரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ராசியில் புதன் சுக்கிரன் இணைவதால் மாணவர்களுக்கு படிப்பு சிறப்பாக இருக்கும். ஆட்சியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்கிறார். இது காதல் மலரும் காலம். வருமானம் அதிகம் வந்தாலும் அதிகம் கடனை கொடுப்பார். இந்த மாதம் வேலை மாற நினைக்க வேண்டாம். சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். முக்கியமான முடிவு செய்யும் போது கவனம் தேவை. திருமணத்திற்கு பார்க்கும் போது ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு போய் நெய் விளக்கு ஏற்றுங்கள் தடைகள் உடைபடும்.

விருச்சிகம்
உங்க ராசிநாதன் செவ்வாய் சூரியன், ஆட்சி பெற்ற புதன் சுக்கிரன் உடன் லாப ஸ்தானத்தில் அமர்வதால் புதிய வேலை கிடைக்கும். 12ஆம் வீட்டின் அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு திடீர் பணவரவு கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். காரணம் புதன் 12ஆம் வீட்டில் இருக்கிறார். சுப விரையங்கள் அதிகம் நடக்கும். காரணம் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். புதன் மறைந்து சுக்கிரன் உடன் சேருகிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத்தரும். வீடு வாகன வசதிகள் கிடைக்கும். சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்குங்கள் நன்மைகள் அதிகம் நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே... நீண்ட நாள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் பற்றுக்கொள்ளுங்கள். நேர்மறையான நினைத்தாலே போதும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். இந்த மாதம் உங்க ராசி அதிபதி குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுப விரையங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் உள்ள சனி கேதுவினால் தலைவலி பிரச்சினைகள் வரும். மாத கோள்களான புதன், சுக்கிரன், சூரியன் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் பாசிட்டிவ் ஆக இருக்கின்றன. நீண்ட நாள் போராட்டங்களுக்குப் பிறகு கோள்களின் சஞ்சாரத்தினால் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். படிப்பு தொடர்பான பயணங்கள் ஏற்படும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்
ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இணையும் கிரகங்களினால் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும், வேலை கிடைக்கும், காதல் விவகாரங்கள் கை கூடும் என்றாலும் எல்லாமே தடை தாமதங்களுடன் நடைபெறும். யாரையும் முழுதாக நம்பவேண்டாம் ஜாமின் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கித்தரவேண்டாம். மகர ராசிக்காரர்களுக்கு பெற்றோர்கள், பெரியோர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எட்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் சில இடைஞ்சல்களை ஏற்படுத்துவார். காலபைரவரை ராகு காலத்தில் வணங்கினால் போதும் சிக்கல்கள் சிதறி ஓடும்.

கும்பம்
எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என கிரகங்கள் சேருவது நல்லதல்ல. சக்திகள் அனைத்தும் விரையமாகும். உங்க ராசிக்கு எட்டாம் அதிபதியான புதன் எட்டாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்வது விபரீத ராஜயோக அமைப்பை ஏற்படுத்தும். இதனால் திடீர் வருமானம் வரும்.
பத்தில் குரு சஞ்சரிப்பதும் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சனி கேது சஞ்சரிப்பதாலும் இந்த மாதம் நிறைய வருமானங்கள் வருவது போல வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. உங்க வேலையில மட்டும் கவனம் செலுத்துங்கள் நல்லதே நடக்கும். குல தெய்வத்தை கும்பிடுங்க பிரச்சினைகள் எளிதில் தீரும்.

மீனம்
இந்த மாதம் உங்க ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. குடும்பத்தில் குதூகலமும் உற்சாகமும் இருந்தாலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் வலுவடைகிறார். எட்டாம் வீடான துலாம் ராசிக்குள் புதன் சுக்கிரன் இணைகின்றனர். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். எட்டாம் அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோக அமைப்பை தருகிறார். திடீர் பணவரவு கிடைக்கும். சிலருக்கு பணத்தட்டுபாடு தீரும். உங்க ராசி மீது சனி செவ்வாய் பார்வை ஏற்படுகிறது. திருமணம், வேலை போன்ற சுப காரியங்கள் செயல்பட விடாமல் தடுக்கும்.இளம் வயதுக்காரர்கள் அதிக எச்சரிக்கையோடு இருங்கள். ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வணங்குங்கள்.



Click it and Unblock the Notifications











