For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் இன்றுவரை விற்கப்படும் சில பொருட்கள்!

ஒரு நாட்டில் அரசியல் சிறப்பாக இருந்தால், அந்நாட்டில் எதையும் நம்மால் உறுதியாக நம்ப முடியும். ஆனால் இந்தியாவில் பணத்திற்காக சில அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கு அனுமதி

|

பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு உணவுப் பொருளும் விற்கப்படுவதாக இருந்தால், அதற்கு அந்நாட்டில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதி மிகவும் அவசியம். உலகில் பல பொருட்கள் பல நாடுகளில் விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நம் தாய் நாடான இந்தியாவில் உள்ள கடைகளில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் ஆரோக்கியமானது தானா? என்று கேட்டால் நம்மால் உறுதியாக கூற முடியாது. இதற்கு காரணம் அரசியல் தான்.

MOST READ: ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா?

நம் நாட்டில் உண்ணும் உணவுகளில் இருந்து, அனைத்திற்கும் பின்னணியில் அரசியல் உள்ளது. ஒரு நாட்டில் அரசியல் சிறப்பாக இருந்தால், அந்நாட்டில் எதையும் நம்மால் உறுதியாக நம்ப முடியும். ஆனால் இந்தியாவில் பணத்திற்காக சில அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. அப்படி வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சில பொருட்களைக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

புகழ்பெற்ற பிராண்டுகளான டாபர், இமாலயா, பைத்யநாத் போன்றவற்றின் தேன் மாசுபட்டுள்ளதாக 2010 இல் தி இந்துவில் வெளிவந்த கதையில் குறிப்பிட்டிருந்தது. சுமார் 10 மாதிரி தேன்களை சோதித்த போது, அவற்றில் மிகவும் அபாயகரமான ஆன்டி-பயாடிக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வகை தேன்கள் இன்றும் கடைகளில் விற்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் கடுமையான உணவு பாதுகாப்பு விதிமுறைகளால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேன் வெளிநாடுகளில் விற்க அனுமதிக்கவில்லை.

சவான்பிரஷ்

சவான்பிரஷ்

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சவான்பிரஷ் சாப்பிடுவது நீங்கள் நல்லது என்று நினைப்பதை விட மிகவும் அபாயகரமானது. கனடா அரசாங்கம் இந்த வகை சப்ளிமெண்ட்டுகளை விற்பதற்கு 2005 இல் தடை செய்துவிட்டது. ஏனெனில் இதில் அதிகளவிலான ஈயம் மற்றும் பாதரசம் உள்ளதாம்.

மருந்துகள்

மருந்துகள்

டி-கோல்ட், விக்ஸ் ஆக்ஷன் 500, எண்ட்ரோக்யூனால், அனால்கின், சிஸ்ப்ரைடு போன்றவை இந்தியாவைத் தவிர பல நாடுகளில் விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் விக்ஸ் ஆக்ஷன் 500 சில நாட்கள் தடை செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் அந்த பிராண்ட் மருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.

பூச்சிக்கொல்லிகள்

பூச்சிக்கொல்லிகள்

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 70 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் இந்தியாவில் விற்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழு பெரும்பாலான பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து பயன்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கியது, அதே சமயம் சில பூச்சிக்கொல்லிகளை மிதமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

கிண்டர் ஜாய்

கிண்டர் ஜாய்

கிண்டர் ஜாய் வாய்க்கு விருந்தளிக்கும் இனிப்புடன் பொம்மையைக் கொண்ட பொருள். இது இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் விற்கப்பட்டாலும், அமெரிக்காவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கிண்டர் ஜாஸை அமெரிக்காவில் வைத்திருந்து சிக்கிக் கொண்டால், உங்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். ஏனெனில் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பொம்மை ஒரு ஆபத்தானது, ஆனால் இந்திய அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஹல்டிகிராம்ஸ்

ஹல்டிகிராம்ஸ்

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹல்டிகிராம் ஸ்நாக்ஸ்களை விற்பனை செய்ய தடை செய்துள்ளது. ஒருமுறை ஹல்டிகிராம் பிஸ்கட்டுகளை சோதிக்கும் போது, அதில் கலப்படம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஹல்டிகிராம் தயாரிப்புக்களை மோசமான உணவுப் பொருளாக குறிப்பிட்டு, தடை செய்துவிட்டனர்.

பெயரில்லாத ஸ்நாக்ஸ்கள்

பெயரில்லாத ஸ்நாக்ஸ்கள்

குஜராத்தில் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத மற்றொரு ஸ்நாக்ஸ் தயாரிப்பாளருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஹல்டிகிராம் தயாரிப்புக்களுக்கு கொடுத்த அதே காரணம் தான். ஆனால் இந்த பொருள் இன்னும் இந்தியாவில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

நெய்

நெய்

இந்தியாவில் நெய் தயாரிக்கப்பட்டால், அந்த நெய் முக்கியமாக அமெரிக்காவில் தடை செய்யப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் நெய்யை சப்பாத்தியின் மீது தடவி சாப்பிடுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களால் இவ்வாறு உண்ண முடியாது. அமெரிக்காவில் இந்திய நெய் தடை செய்யப்படுவதற்கு காரணம், நெய் விற்கப்படும் ஜாடி அல்லது பாட்டிலின் லேபிளில் உள்ளடக்கங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருப்பது தானாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Products Banned Abroad But Widely Available In India

In this article we will focus on products that are banned abroad but are easily available in India.
Desktop Bottom Promotion