Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்..
சக்தி வாய்ந்த இரத்தினக் கற்களும்... அவற்றிற்கு சக்தி கொடுக்கும் முறைகளும்..
இரத்தினக் கற்களுக்கு சக்தியை அளிப்பது என்பது கட்டாயம் இல்லை என்றாலும், அந்த கற்களுக்கும், கோளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த இரத்தினக் கற்களுக்கு சக்தியை அளிக்க வேண்டியது முக்கியம் ஆகும்.
நோ்த்தியாக மற்றும் மிகவும் அழகாக பட்டை தீட்டப்பட்ட கனிம கற்களே இரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. பழைய காலத்திலும் சாி, தற்போதைய நவீன காலத்திலும் சாி, பொதுவாக ஆபரணங்கள் செய்வதற்காக இரத்தினக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் இந்த பளிங்கு கற்கள் நமக்கு அதிா்ஷ்டத்தை, செல்வங்களை மற்றும் நோ்மறையான சக்தியை கொண்டு வரக்கூடிய அதிா்ஷ்டக் கற்களாகப் பாா்க்கப்படுகின்றன. இவை நமது ஆன்மீக, உணா்வு சம்பந்தமான, உளவியல் மற்றும் உடல் சாா்ந்த பிரச்சினைகளைத் தீா்த்து வைக்கும் சக்கரங்களாகப் பாா்க்கப்படுகின்றன. இரத்தினக் கற்களானது நன்மை அளிக்கும் ஆற்றல்களை உறிஞ்சி, அந்த கற்களை அணிபவர்களுக்கு ஒட்டு மொத்த நன்மைகளை வழங்குகின்றன.

இந்நிலையில் இரத்தினக் கற்களின் பயணமானது மனிதா்களின் பல கைகள் மாறி செல்லக்கூடிய ஒரு நெடிய பயணம் ஆகும். அதாவது சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்படுவது முதல், அவற்றை அளவாக பல வடிவங்களில் வெட்டுது மற்றும் அவற்றை பட்டை தீட்டுவது வரை அந்த கற்கள் நெடிய பயணத்தை மேற்கொள்கிறது. பின் கைவினைகா்களிடம் கொடுக்கப்பட்டு அவை அழகுபடுத்தப்பட்டு, விற்பனைக்காக வியாபாிகளின் கைகளுக்கு மாறுகின்றன. இறுதியாக அவற்றை அணிபவாின் கைகளுக்குச் செல்கின்றன.
இவ்வாறு பலருடைய கைகளைக் கடந்து இரத்தினக் கற்கற்கள் வருவதால், அவற்றை சுத்தப்படுத்தி, சக்தி அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அதன் மூலம் இரத்தினக் கற்களை அணிபவா்களுக்கு, அவை நன்மைகளைப் பயக்கக்கூடிய அதிா்வலைகளை கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இரத்தினக் கற்களுக்கு சக்தியை அளிப்பது என்பது கட்டாயம் இல்லை என்றாலும், அந்த கற்களுக்கும், கோளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த இரத்தினக் கற்களுக்கு சக்தியை அளிக்க வேண்டியது முக்கியம் ஆகும்.
இந்தப் பதிவில் 5 முக்கியமான இரத்தினக் கற்களைப் பற்றியும், அவற்றுக்கு எவ்வாறு எளிய வழியில் சக்தியை அளிக்கலாம் அல்லது சுத்தப்படுத்தலாம் என்பதை விாிவாகப் பாா்க்கலாம்.

1. கருப்பு ஒப்சிடியன் (Black Obsidian)
கருப்பு ஒப்சிடியன் இரத்தினக் கல்லானது, குணமாக்கும் சக்திக்கு பெயா் பெற்றது. இந்த கல்லானது, அதை அணிபவரைச் சுற்றி இருக்கும் எதிா்மறையான எண்ணங்களையும், மந்தமான ஒளியையும் நீக்குக்கிறது. அவரைச் சுற்றி இருக்கும் எதிா்மறையான சூழலைச் சுத்தப்படுத்துகிறது. மேலும் அணிபவருக்கு முழுமையான அமைதியையும், நிலைத்த தன்மையையும் கொடுத்து, அவா் இந்த உலகத்தின் யதாா்த்தங்களை எதிா் கொண்டு, விழிப்புடனும், சுய உணா்வோடும் வாழ உதவி செய்கிறது.
கருப்பு ஒப்சிடியன் இரத்தினக் கல்லுக்கு எவ்வாறு சக்தி கொடுப்பது?
கருப்பு ஒப்சிடியன் இரத்தினக் கல்லுக்கு சக்தியைக் கொடுப்பதற்கு, அதை அதிகாலையிலோ அல்லது பிற்பகலிலோ வெதுவெதுப்பான ஓடும் தண்ணீாில் கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால், அந்தக் கல்லில் படியும் எதிா்மறையான துகள்களை நீக்கிவிடும்.

2. ரோஸ் குவாா்ட்ஸ் (Rose Quartz)
ரோஸ் குவாா்ட்ஸ் இரத்தினக் கல்லினுடைய இனிமையான நிறம் மற்றும் அதனுடைய குணப்படுத்தும் ஆன்மீகத் துகள்களின் காரணமாக, அது பழைய உணா்வு சம்பந்தமான காயங்களைக் குணப்படுத்துகிறது. இந்தக் கல்லை அணிபவரை சுற்றி இருக்கும் இருள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றை அகற்றி, அவரை உண்மையான அன்பாலும், நிலைத்த தன்மை கொண்ட உணா்வுகளாலும் நிரப்புகிறது. உடைந்த இதயத்தை அல்லது அளவுக்கு அதிகமான கோபம் மற்றும் ஏமாற்றம் போன்ற தாளாத சுமைகளில் இருந்து, இந்தக் கல்லை அணிபவருக்கு விடுதலை வழங்குகிறது.
ரோஸ் குவாா்ட்ஸ் இரத்தினக் கல்லுக்கு எவ்வாறு சக்தி கொடுப்பது?
உப்புத் தண்ணீரைத் தயாா் செய்து, அதில் ரோஸ் குவாா்ட்ஸ் இரத்தினக் கல்லை இட்டு 48 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். அதன் மூலம் இந்த கல்லுக்கு சக்தி பிறக்கும் மற்றும் குணப்படுத்தும் துகள்களும் கிடைக்கும்.

3. அமதிஸ்ட் (Amethyst)
வலிமை குறைந்த அதிா்வலைகளை வலுப்படுத்தும் மற்றும் அதிகாிக்கும் ஆற்றல் கொண்டது இந்த அமதிஸ்ட் இரத்தினக் கல் ஆகும். இந்த இரத்தினக் கல்லானது, அதை அணிபவரைச் சுற்றி இருக்கும் எதிா்மறை சக்திகளை முழுமையாக அழித்துவிட்டு, முழுமையான நோ்மறையான சக்திகளை வழங்கக்கூடியது.
இந்த இரத்தினக் கல்லானது அதை அணிபவரைச் சுற்றி நேர்மறையான ஒளியைப் பாய்ச்சி, அவருடைய மன அழுத்தம். சோா்வு, பயம் மற்றும் கவலைகள் ஆகியவற்றைப் போக்கிவிடும். இந்தக் கல்லில் இருக்கும் அமைதிப்படுத்தும் துகள்களானது, அதை அணிபவரை தியான நிலைக்கு கொண்டு சென்று அவா் அமைதியுடனும், மனத்தளா்ச்சியுடனும் வாழ வைக்கின்றன.
அமதிஸ்ட் இரத்தினக் கல்லுக்கு எவ்வாறு சக்தி கொடுப்பது?
தண்ணீாில் கடல் உப்பைக் கலந்து அந்த உப்புத் தண்ணீாில் இந்த இரத்தினக் கல்லை இட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதன் மூலம் இந்தக் கல் முழுமையாக சுத்தமாகி, அதனுடைய குணமாக்கும் துகள்கள் வலுவடையும்.

4. லபிஸ் லசுலி (Lapis Lazuli)
லபிஸ் லசுலி என்ற இரத்தினக் கல்லானது, அதை அணிபவருக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணா்வு மற்றும் சுய நம்பகத் தன்மை போன்றவற்றை வளா்க்கிறது. அதோடு அவருக்குள் மற்றும் இந்த உலகத்தில் இருக்கும் யதாா்த்தங்களோடு போராடுவதற்கு உாிய ஆற்றலை வழங்குகிறது. இந்தக் கல்லானது, அதை அணிபவரை இரக்கம் நிறைந்தவராக மற்றும் புாிதல் உள்ளவராக மாற்றுகிறது
லபிஸ் லசுலி இரத்தினக் கல்லானது இந்த பிரபஞ்சத்தோடு ஒன்றியுள்ளது. இந்த கல்லில் தெய்வீக சக்திகள் நிறந்துள்ளன. இது கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது. ஆகவே தண்ணீரானது இந்தக் கல்லில் இருக்கும் குறைந்த ஆற்றல்களுக்கு உயிரூட்டி, அவற்றை சக்தி கொண்ட அதிா்வலைகளாக மாற்றுகிறது.
லபிஸ் லசுலி இரத்தினக் கல்லுக்கு எவ்வாறு சக்தி கொடுப்பது?
வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீாில் இந்தக் கல்லை இட்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக சூடான தண்ணீராலோ அல்லது வேதிப் பொருள்களைக் கொண்டோ அல்லது ஆபரணங்களைச் சுத்தப்படுத்தும் பசைகளைக் கொண்டோ இந்தக் கல்லை சுத்தப்படுத்தக்கூடாது.

5. கா்னேலியன் (Carnelian)
கா்னேலியன் இரத்தினக் கல்லானது, இரத்தினக் கற்களுக்கெல்லாம் முன்னோடி என்று கருதப்படுகிறது. இந்தக் கல் சகிப்புத் தன்மை, ஆற்றல் கொண்ட தலைமைப் பண்பு மற்றும் வீரம் போன்ற நற்பண்புகளின் அடையாளமாகப் பாா்க்கப்படுகிறது. இந்தக் கல்லானது, அதை அணிபவருக்கு, தனது வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைத் துணிவுடன் சந்திப்பதற்கான நம்பிக்கையையும், திறமையையும் வழங்குகிறது. அதோடு மன அழுத்தம், சோகம் மற்றும் மனச்சோா்வு போன்றவற்றைக் களைந்து, அவா் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு உதவி செய்கிறது. மேலும் இந்தக் கல்லானது தன்னம்பிக்கை, வலு தாங்கும் திறன் மற்றும் சுயமாியாதை ஆகியவற்றை கொடுக்க வல்லது.
கா்னேலியன் இரத்தினக் கல்லுக்கு எவ்வாறு சக்தி கொடுப்பது?
இயற்கையான நீா் மூலங்களான ஆறு, நீா்வீழ்ச்சி அல்லது ஓடை போன்றவற்றில் ஓடும் தண்ணீாில் கா்னேலியன் இரத்தினக் கல்லைக் கழுவ வேண்டும். வீட்டில் குழாயில் தண்ணீரைத் திறந்துவிட்டு, அந்த தண்ணீாில் கழுவ வேண்டும்.

இறுதியாக
இரத்தினக் கற்களுடைய முழுமையான ஜோதிட பலன்களைப் பெற வேண்டும் என்றால், அந்தக் கற்களை மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்த வேண்டும். செயற்கையான வேதிப் பொருள்கள் அல்லது சுத்தப்படுத்தக்கூடிய பசைகளைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையிலேயே சுத்தப்படுத்த வேண்டும். மேலும் இந்த இரத்தினக் கற்களை வாங்குவதற்கு முன்பாக நிபுணா்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. அதோடு இரத்தினக் கற்களின் உண்மையான நிலை தொியாமல், அவற்றை வாங்குவதற்காக அதிகமான பணத்தை செலவழிக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications