Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
Pongal 2024 : பொங்கல் பண்டிகை ஏன் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Pongal 2024: எப்படியோ நல்லவிதமாக 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். இந்த புத்தாண்டின் முதல் பண்டிகையாக வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைவரும் ஆலவலுடன் இருப்போம். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.
இந்த பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது ஒரு அறுவடை திருவிழாவாகும். இது நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் தைப்பொங்கல் என்றும் அழைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையானது பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த பண்டிகை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 2024 ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும், அதன் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சரி, இந்த நான்கு நாட்களும் எதனால் கொண்டாடப்படுகிறது என்பதை இப்போது காண்போம்.

பொங்கல் 2024 தேதி
* போகிப்பண்டிகை - 2024 ஜனவரி 14, ஞாயிற்றுக்கிழமை
* தைப்பொங்கல் - 2024 ஜனவரி 15, திங்கட்கிழமை
* மாட்டுப்பொங்கல் - 2024 ஜனவரி 16, செவ்வாய்க்கிழமை
* காணும் பொங்கல் - 2024 ஜனவரி 17, புதன்கிழமை

போகி பண்டிகை
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் விவசாயத்திற்கு நல்ல விளைச்சல் நிலத்துடன் மழையையும் தந்த இந்திரனை வணங்குவார்கள். இது தவிர ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியின் கடைசி நாளன்று வீட்டிற்கு கொண்டு வருவார்கள். அதோடு இந்நாளில் மக்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்வார்கள்.

தைப்பொங்கல்
பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் தான் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலானது தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும். இந்நாளில் மக்கள் அறுவடை செய்த புதிய பச்சரியால் பால், வெல்லம் சேர்த்து புதிய பானையில் பொங்கல் வைத்து, விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவார்கள்.

மாட்டுப்பொங்கல்
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் கொண்டாடப்படுவது மாட்டுப்பொங்கல். இந்நாளில் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கால்நடைகளை அழகாக அலங்கரித்து, கழுத்தில் மணிகளைக் கட்டி, பொங்கல் வைத்து அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்கள். மேலும் திருக்குறள் மூலம் தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்ததால், இந்நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்
காணும் பொங்கல் பண்டிகையானது ஓய்வின்றி விவசாயம் செய்ததால், ஓய்விற்காகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீட்டிற்கு செல்வது மற்றும் வீட்டு பெரியோரின் ஆசியைப் பெறுவது போன்றவற்றையும் மக்கள் மேற்கொள்வார்கள். முக்கியமாக இந்த நாளன்று ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் நடைபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)



Click it and Unblock the Notifications
