Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்..
ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் இன்று இதெல்லாம் செஞ்சா சனி பகவானின் பாசத்தை பெறலாம்..
ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் 5 ராசிக்காரர்கள், தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த குரு பூர்ணிமா நாளில் ஒருசில விஷயங்களை செய்வது நல்லது.
ஆடி மாதத்தின் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இது மகரிஷி வேத வியாசர் பிறந்த நாளாக நம்பப்படுகிறது. நான்கு வேதங்களின் அறிவை மனித குலத்திற்கு முதன்முதலில் வழங்கியவர் குரு வேத வியாசர் என்பதால், அவர் பிறந்த தேதி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் குரு பூர்ணிமா ஜூலை 23 ஆம் தேதி காலை 10:43 மணி முதல் 2021 ஜூலை 24 ஆம் தேதி காலை 08:06 வரை ஆகும்.

இந்த வருடம் குரு பூர்ணிமா நாளில் சனி பகவானை வழிபடுவது சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர். எனவே ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் 5 ராசிக்காரர்கள், தங்கள் கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த குரு பூர்ணிமா நாள் மிகச்சிறந்ததாக இருக்கும். குரு பூர்ணிமா நாளில், இந்த ராசிக்காரர்கள் சனி பகவான் தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபட முடியும்.

ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடக்கும் ராசிக்காரர்கள்
ஜோதிட வல்லுநர்களின் படி, இந்த காலத்தில் தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் சனி பகவானின் கோபத்தை எதிர்கொள்கின்றன. ஏழரை சனியின் போது, ஒருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பல சிக்கல்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே நேரத்தில், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. எந்த ஒரு ராசியில் சனி பகவான் இரண்டு ஆண்டுகள் இருக்கிறதோ, அது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. இதன் போது ஒருவரது திருமண வாழ்க்கை, காதல் உறவு மற்றும் தொழில் போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த பிரச்சனைகளை சமாளிக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நாய்க்கு உணவளிக்கவும்
சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயில் சுட்ட ரொட்டியை கருப்பு நிற நாய்க்கு கொடுங்கள். ஒருவேளை கருப்பு நிற நாய் உங்களுக்கு கிடைக்காவிட்டால், வேறு எந்த நாய்க்கும் கொடுக்கலாம்.

கருப்பு எள்ளு விதை
கருப்பு எள்ளு விதைகளை நீரில் போட்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். ஏனெனில் சனி பகவான் தனது குருவாக சிவபெருமானைக் கருதுகிறார். எனவே சிவபெருமானை வணங்குபவர்களுக்கு சனி பகவான் எவ்வித தொந்தரவும் கொடுக்கமாட்டார்.

கடுகு எண்ணெய் விளக்கு
அரச மரத்திற்கு அடியில் ஒரு கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள். அருகில் சனிபகவான் கோயில் இருந்தால், அங்கேயும் ஒரு விளக்கேற்றி வையுங்கள்.

தானம் அளிக்கவும்
கடுகு எண்ணெய், கருப்பு எள்ளு விதைகள், இரும்பு பொருட்கள், கருப்பு பயறு, கருப்பு நிற உடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குங்கள். இதனால் சனி பகவானின் அருளைப் பெற்று, அவர் கொடுக்கும் சிரமங்களில் இருந்து விடுபடலாம்.

அனுமனை வணங்கவும்
அனுமனை வணங்குங்கள். ஏனெனில் சனி பகவானின் நெருங்கிய நண்பர் அனுமன். அனுமனை வணங்குபவர்களை சனி பகவான் ஒருபோதும் துன்புறுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே குரு பூர்ணிமா நாளில் அனுமன் முன்பு ஒரு விளக்கேற்றி அனுமன் சாலிசாவை படியுங்கள்.

மந்திரத்தை கூறவும்
'ஓம் சனீஷ்வராய நமஹ' என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டே அரச மரத்தை ஏழு முறை சுற்றுங்கள். இப்படி குரு பூர்ணிமா நாளைத் தவிர, சனிக்கிழமைகளிலும் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
