Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரும் நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!
இந்த ராசிக்காரங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் காதல் செட் ஆகாதாம்...
ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 3 ராசிக்காரர்களால் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் பெற முடியாது. இதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு உண்மையான அன்பு தேவை. இத்தகைய அன்பு அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு எளிதில் மற்றும் விரைவில் கிடைத்துவிடும். இன்னும் சிலருக்கு என்ன முயற்சித்தாலும் கிடைக்காது. ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் 3 ராசிக்காரர்களால் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் பெற முடியாது. இதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இப்படி சிலருக்கு உண்மையான அன்பு கிடைக்காமல் இருப்பதற்கு, அவர்களின் இயல்பு காரணமாக இருக்கலாம் மற்றும் சில நேரங்களில் அவர்கள் மனதளவில் காயமடையலாம். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் வலுவானவர்கள் மற்றும் எந்த வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். மேலும் இவர்கள் அவ்வளவு எளிதில் எதையும் விட்டுவிடமாட்டார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பரந்த மனம் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் மனநிலை எப்போதும் சற்று சூடாகவே இருக்கும். இவர்கள் மிகவும் அதிகமாக கோபப்படுபவர்கள். அதன் காரணமாக பல முறை கோபத்தில் சில தவறான முடிவுகளை எடுத்து, பின்னர் வருத்தப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த வழியில் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக எதையும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். இத்தகைய சூழ்நிலையில், இவர்களை யாராவது கட்டுப்படுத்த முயற்சித்தால், அதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதோடு, இவர்கள் தவறான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் அவர்கள் காதல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே தான் பலர் இவர்களிடம் இருந்து விலகி இருக்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் யாரையாவது காதலித்தால், அவர்களை இவர்கள் அதிகம் காதலிப்பார்கள். மற்றவர்களிடமும் அந்த காதலை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்களால் தங்கள் காதலை வெளிப்படுத்த தெரியாது. இதனாலேயே பலர் இவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை என்று தவறாக நினைக்கிறார்கள். மேலும் இவர்கள் மிகவும் கோபக்காரர்கள். இவர்கள் கோபத்தில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த கோபம் இவர்களின் உறவிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அனைவராலும் இவர்களை சகித்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே இவர்களுக்கு உண்மையான காதல் எளிதில் அமைவதில்லை.

மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இவர்கள் தவறான விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எந்த ஒரு கடினமான முடிவையும் எடுக்க தயங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ற ஆள் கிடைக்காவிட்டால், காதலில் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிக வேகமாக கோபப்படுவார்கள். பல நேரங்களில் மக்கள் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், இவர்களின் நடத்தையை வைத்து இவர்களை தவறாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் கடினமான சோதனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மறுப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. பொது நலனைக் கருத்தில் கொண்டே இங்கு வழங்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











