Latest Updates
-
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா?
நம்முடைய இன்பம், துன்பம் இரண்டிற்குமே காரணம் நமக்குள் இருக்கும் சில குணங்கள்தான். அதன்படி நம்முடைய மகிழ்ச்சியை சிதைவதற்கும் நம்மிடம் இருக்கும் ஒரு குணம்தான் காரணமாக இருக்கும்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஒரே இலட்சியம் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பது. ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தை வழங்கும் ஒவ்வொன்றாக இருக்கும். இது அவரவர் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை பொறுத்தது. ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும் காரணம் எப்படி வேறுபடுகிறதோ அதேபோல ஒவ்வொருவரின் சோகத்திற்கான காரணமும் வேறுபடும்.

நம்முடைய இன்பம், துன்பம் இரண்டிற்குமே காரணம் நமக்குள் இருக்கும் சில குணங்கள்தான். அதன்படி நம்முடைய மகிழ்ச்சியை சிதைவதற்கும் நம்மிடம் இருக்கும் ஒரு குணம்தான் காரணமாக இருக்கும். ஜோதிடசாஸ்திரத்தின் படி இந்த குணம் அவரவர் பிறந்த ராசியை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த பதிவில் உங்க ராசிப்படி உங்களோட எந்த குணம் உங்கள சந்தோசமா இருக்க விடாம செய்யும்னு பார்க்கலாம்.

மேஷம்
உங்களை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விடாமல் தடுக்கும் உங்களின் குணம் உங்களுடைய மனக்கிளர்ச்சிதான். திட்டங்களை உருவாக்குவதும் அதனை மாற்றுவதும் உங்களுக்கு பெரிய விஷயமாகவே தோன்றாது. ஒரு கணம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அடுத்த கணமே உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள். உங்களின் இந்தமனக்கிளர்ச்சியை கட்டுப்படுத்துங்கள். ஒரு செயலைத் தொடங்கினால் அதை முடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டாலே போதும் உங்கள் வாழ்க்கையில் அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.

ரிஷபம்
உங்களிடம் இருக்கும் பொறுமையின்மைதான் உங்களின் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது. சிக்கலைத் தீர்ப்பதற்கும், தீர்வுகளை பெறுவதற்கும் நீங்கள் எப்போதும் காத்திருக்க மாட்டிர்கள். உங்களின் அவசரம் உங்களை அனைவரின் முன்னிலையிலும் ஒரு முட்டாளாக தோற்றமளிக்க வைக்கும். உங்களை பொறுமைதான் உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி ஆகும்.

மிதுனம்
உங்களுக்கு முதலில் நீங்கள் உண்மையாக இருங்கள். நீங்கள் எதையாவது செய்ய நினைத்தால் அதனை உடனடியாக செய்யுங்கள், கடைசி நிமிடத்தில் உங்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒருவரை பிடித்தால் அவர்களை நேசியுங்கள். அவர்களைப் பற்றி முழுதாக தெரியாமல் அவர்களின் மனதை உடைக்காதீர்கள். உங்களின் இந்த முரண்பாட்டை அனைவரும் வெறுப்பார்கள். நீங்கள் அதனை கவனிக்கா விட்டாலும் இது உங்களை மோசமானவராக அனைவரிடமும் காட்டும்.

கடகம்
நீங்கள் மிகவும் நல்லவராக இருப்பதே இறுதியில் உங்களை அழித்துவிடும். உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இந்த மிகப்பெரிய அழுத்தத்தை உங்களுக்குள் நீங்களே சுமந்து கொண்டிருக்கும் வரை உங்களால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நீங்கள் எதிர்கொள்ளும் தோல்வி உங்களை தொடர்ந்து பிழையாகக் கொண்டு, அமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்க வைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து, அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதை ஒருமுறை உணர்ந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
அனைத்தையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்ற அதீத நம்பிக்கை உங்களுக்குள் இருக்கும். எனவே உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப காரியத்தை முடிக்கும் வரை நீங்கள் வேலையை செய்து கொண்டே இருப்பீர்கள். இந்த பரிபூரண எண்ணமே உங்களின் மகிழ்ச்சியை சிதைக்கும். உங்களிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைவது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

கன்னி
உங்களின் மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது உங்களின் பிடிவாதம்தான். குறிப்பாக நீங்கள் செய்தது தவறு என்று உங்களுக்கேத் தெரிந்தாலும் உங்களின் பிடிவாத குணம் அதனை ஒப்புக்கொள்ள விடாது. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் அதை வேறொருவர் மீது குற்றம் சாட்ட முயற்சிப்பீர்கள், இது மிகவும் மோசமான ஒரு குணமாகும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக்க விரும்பினால் நீங்கள் அனைத்திலும் எப்போதும் சரியாகத்தான் இருப்பீர்கள் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.

துலாம்
உங்களின் எளிதில் ஏமாறும் குணம்தான் உங்களை மகிழ்ச்சியாக வாழவிடாமல் செய்கிறது. நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு கேட்கும் அனைத்தையும் உடனே நம்புவதுதான். ஒருவரின் முடிவுகள் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதாக இருந்தாலும் அவர்களின் கோட்பாடுகளுக்கு அல்லது சொந்த சிந்தனைக்கு உங்களை வற்புறுத்துவதற்கு அவர்கள் அதிக சிரமப்படவேண்டியதில்லை. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இல்லாமல் இருப்பதுதான் உஙக்ளின் மிகப்பெரிய பிரச்சினை. உங்களின் சொந்த கருத்தை நீங்களே மதிப்பதில்லை. உங்களின் கருத்துக்கும், முடிவுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
உங்களின் மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது உங்களின் மனப்பான்மைதான்(Attitude). "சமரசம்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று கூட உங்களுக்குத் தெரியாது. யாருக்காகவும், எதற்காகவும் நீங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டிர்கள். உண்மை என்னவெனில் உங்களுக்கு நல்லது எது உங்களுக்கு தெரியாது. மற்றவர்களின் கருத்துக்கும் ஓரளவிற்கு மதிப்புக் கொடுப்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

தனுசு
உங்களின் பொஸசிவ்னெஸ் உங்களை உயிருடன் கொள்ளும். எப்போதும் கவனம் மற்றும் அன்புக்காக ஏங்கும் குணம் அனைவரையும் உங்களை வெறுக்க வைத்துவிடும். நீங்கள் விரும்பும் கவனத்தை எப்போதும் ஒருவரால் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. பிரச்சினை என்னவென்றால் நீங்கள் எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதற்கு ஈடாக நீங்கள் எதையும் செய்வது இல்லை. நீங்கள் எதையாவது செய்துவிட்டு கவனத்தை எதிர்பார்ப்பது நல்லது, எதுவுமே செய்யாமல் அனைவரும் உங்கள் மீது அன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது உங்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியை வழங்காது.

மகரம்
நீங்கள் யாரையும் நம்புவதில்லை, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களை அழிக்கவும் தங்களை திருப்திப்படுத்தவும் திட்டத்தை வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். மக்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும், உதவியாகவும் இருக்க முடியும் என்பதில் உங்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.இந்த உலகில் இந்த சிந்தனை அவ்வளவு அசாதாரணமானது அல்ல என்றாலும், அது உங்களை மகிழ்ச்சியற்ற மற்றும் நிறைவேறாத வாழ்க்கைக்கும் இதுதான் காரணாமாக இருக்கும். இரக்க குணத்தை அறவே தவிர்ப்பது உங்களை ஒருபோதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவாது.

கும்பம்
உங்களிடம் அளவற்ற ஆற்றல் இருக்கிறது, உங்களிடம் புத்திசாலித்தனமும், தந்திரமும் நிறைந்திருக்கும். ஆனால் உங்களின் பிரச்சினை என்னவென்றால் நீங்கள் இவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை . உங்களின் சோம்பேறித்தனம்தான் உங்கள் மகிழ்ச்சியை சிதைக்கும் உங்களின் குணமாகும். மறுபுறம், இது உங்கள் விருப்பம். சோம்பேறியாக இருப்பது நீங்கள் தேர்வுசெய்த ஒன்று. நீங்கள் விரும்பினால், உங்கள் வாழ்க்கையை சில நொடிகளில் திருப்பலாம். அதைச் செய்வதற்கான திறனும் அறிவார்ந்த திறனும் உங்களிடம் உள்ளது. நீங்கள் அதை முடிவு செய்து தொடங்க வேண்டும்.

மீனம்
உங்களின் மகிழ்ச்சிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் குணம் உங்களின் பேராசையாகும். அழகான பொருட்களை தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களின் மகிழ்ச்சியை சிதைக்கிறது. உணர்ச்சிகளையும், உறவுகளையும் விட பொருட்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதீத முக்கியத்துவம் உங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி வைக்கும். பணமும், பொருளும் மகிழ்ச்சியை வழங்காது என்று நீங்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.உங்களின் மகிழ்ச்சிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் குணம் உங்களின் பேராசையாகும். அழகான பொருட்களை தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களின் மகிழ்ச்சியை சிதைக்கிறது. உணர்ச்சிகளையும், உறவுகளையும் விட பொருட்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதீத முக்கியத்துவம் உங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி வைக்கும். பணமும், பொருளும் மகிழ்ச்சியை வழங்காது என்று நீங்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.



Click it and Unblock the Notifications











