Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
உங்க ராசிப்படி அக்டோபர் மாதம் உங்க காதல் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா?இந்த 4 பேர் பாவம்!
ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு ஆச்சரியத்துடன் காத்திருக்கிறது. அந்த விதத்தில் வரப்போகிற புது மாதமான அக்டோபர் நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த காத்திருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு ஆச்சரியத்துடன் காத்திருக்கிறது. அந்த விதத்தில் வரப்போகிற புது மாதமான அக்டோபர் நம் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த காத்திருக்கிறது. இந்த நவராத்திரி மாதம் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் எபப்டிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த மாதம் பலரின் காதல் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். நீங்கள் விரும்பியவருடன் சேரலாம் அல்லது காதலில் பிரிவு ஏற்படலாம் அல்லது உங்கள் காதல் அடுத்த நிலைக்கு செல்லலாம், இப்படி என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் இந்த மாதம் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
திருமணமாகாதவர்கள் பொருத்தமான கூட்டாளரைத் தேடுவார்கள், அவர்கள் உறவில் வெற்றிபெற்றால், உறவில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்ய விரும்புவார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்க்கையில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். இந்த மாதம் இருவரும் விலகியே இருப்பார்கள்.

ரிஷபம்
இந்த மாதம் சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் மோசமான கடந்தகால அனுபவங்கள் காரணமாக உறவில் ஈடுபடுவதற்கு சாதகமாக உணர மாட்டார்கள். அதேசமயம், பிணைப்பு வளரவும் வலுவாகவும் இருக்க, தம்பதிகள் தங்கள் உறவில் அதிக முதலீடு செய்வார்கள்.

மிதுனம்
இந்த மாதம் மிதுனம், உங்கள் துணை அல்லது நீங்கள் விரும்புபவர் உங்களை மகிழ்விக்க அல்லது உங்களுடன் இருக்க முயற்சி செய்வார்கள். ஆனால், நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்கும் மனநிலையில் இருக்க மாட்டீர்கள். இது உங்களுக்கு அபாயகரமானது என்று நினைக்கலாம். மாறாக, இது உங்களுக்கு நல்ல விஷயங்களையும். மகிழ்ச்சியையும் தரும் என்பதால் நீங்கள் எந்த சலுகையையும் ஏற்றுக்கொள்வது நல்லது.

கடகம்
இந்த மாதம் காதலில் ஈடுபடுவதற்கான முடிவை எடுக்கும் மனநிலையில் சிங்கிளாக இருப்பவர்கள் இருக்க மாட்டார்கள். மறுபுறம், உறவில் இருப்பவர்கள் உணர்வுபூர்வமாக சிக்கியிருப்பதை உணர்கிறார்கள் மற்றும் சிக்கல் நிறைந்த உறவிலிருந்து வெளியேற முயற்சிப்பார்கள்.

சிம்மம்
இந்த மாதம் சிங்கிளாக இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் அவர்கள் விரும்புபவர்களின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே காதலில் ஈடுபட முடியும். ஆனால் உறவில் இருப்பவர்கள் தங்கள் கடந்த கால செயல்களின் விளைவுகளை சந்திப்பார்கள்.

கன்னி
சிங்கிளாக இருப்பவர்கள் இறுதியாக இந்த மாதம் தங்கள் காதலை முன்மொழிவதற்கான தைரியத்தை பெறுவார்கள். அவர்கள் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் க்ரஷ் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்வார். காதலில் இருப்பவர்கள் காதலிக்கத் தொடங்கியதற்கு வருத்தப்படுவார்கள்.

துலாம்
சிங்கிளாக இருப்பவர்கள் புதிதாக எதையும் அனுபவிக்க தயாராக இருப்பார்கள். அதேசமயம், உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து குழப்பமடைவார்கள். சில உணர்ச்சி சிக்கல்களுடன் சிறிது பதற்றம் இருக்கும்.

விருச்சிகம்
சிங்கிளாக இருப்பவர்கள் ஒரு உறவில் இருப்பதன் நன்மை தீமைகள் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பார்கள். அதேசமயம், இந்த மாதம் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிறிது தூரத்தை கடைபிடிக்க வாய்ப்புள்ளது.

தனுசு
இந்த மாதம் தனுசு, உங்கள் காதல் ஜாதகம் நீங்கள் சிங்கிளாக இருந்தால் நீங்கள் விரும்பும் சரியான நபரை சந்திப்பீர்கள் என்று கூறுகிறது. தம்பதிகள் சில வெளியாட்களிடமிருந்து சில ஆலோசனைகளைப் பெறுவார்கள். அவர்கள் அந்த ஆலோசனையைப் பின்பற்றத் தேர்வுசெய்தால், அவர்கள் உறவில் வளர்ச்சியைக் காண்பார்கள்.

மகரம்
இந்த மாதம் சிங்கிளாக இருப்பவர்கள் பணக்கார குடும்பங்களில் இருந்து திருமண வாய்ப்புகளைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் அல்லது உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவில் சில பிரச்சனைகள் எதிர்கொள்ளக்கூடும். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்க ஒரு நம்பகமான நபரிடம் ஆலோசனை கேட்டால் அது பயனளிக்கும்.

கும்பம்
இந்த மாதம் சிங்கிளாக இருப்பவர்கள் வாழ்க்கையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஏற்கனவே உறவில் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து ஆரோக்கியமான உறவைப் பேண ஒரு வழியைத் திட்டமிடுவார்கள். நீங்கள் எதைச் செய்ய திட்டமிட்டாலும் அது நேர்மறையான முடிவுகளைத் தரும்.

மீனம்
இந்த மாதம் சிங்கிளாக இருக்கும் மீன ராசிக்காரர்கள் காதலில் ஈடுபட விரும்பினால் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். விஷயங்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற அவர்கள் நிறைய நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்ய வேண்டும். மறுபுறம், ஏற்கனவே உறவில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கவனிக்க மாட்டார்கள். அவர்களின் உறவு சீராக செல்லும். இருவரும் ஒருவருக்கொருவர் இடம் கொடுப்பார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதிப்பார்கள்.



Click it and Unblock the Notifications