Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...!
எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்
தலைக்கு குளிப்பது என்பது அனைத்து கலாச்சாரங்களிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், மதத்திலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கடவுளும், வழிபாடும் உள்ளது.

எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும், அதேசமயம் சில நாட்களில் தலைக்கு குளிப்பது கெட்ட பலன்களை வழங்கும். இந்த பதிவில் எந்தெந்த நாட்களில் தலைக்கு குளிக்கக் கூடாது என்று பார்க்கலாம்.

செவ்வாய்க் கிழமை
புரதான நம்பிக்கைகளின் படி செவ்வாய்க் கிழமையில் தலைக்கு குளிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு குளிக்கக் கூடாது. செவ்வாய் கிழமையன்று தலைக்கு குளிப்பது உங்கள் மீது செவ்வாயின் தாக்கத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் செவ்வாய் கிழமையில் தலைக்கு குளிக்க கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

புதன் கிழமை
முன்னோர்களின் கூற்றுப்படி புதன் கிழமை பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது. இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் பெண்கள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு மகனைக் கொண்ட தாய்மார்கள் ஒருபோதும் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. இது அவர்களின் மகனை ஆரோக்கியரீதியாக பாதிக்கும். அதேபோல புதிதாக திருமணம் ஆன பெண்கள் புதன் கிழமையன்று தலைக்கு குளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமை
இந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் கடுமையாக கடைபிடிக்கும் நம்பிக்கை இதுவாகும். வியாழக்கிழமை அன்று தலைக்கு குளிப்பது உங்கள் வீட்டில் இருக்கும் லட்சுமியை வெளியே அனுப்பும் செயலாகும். இதனால் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமடையக்கூடும். மேலும் புராணக்கதைகளின் படி வியாழக்கிழமையில் தலைக்கு குளிக்கும் பெண் தன்னுடைய செல்வத்தை படிப்படியாக இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமையன்று துணி துவைப்பது கூட தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

சனிக்கிழமை
சனிக்கிழமை தலைக்கு குளிப்பதைப் பற்றி பலவிதமான கதைகள் இந்து புராணங்களில் உள்ளது. சில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது உங்களுக்கு இருக்கும் சனி தோஷத்தின் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது. வேறுசில நம்பிக்கைகளின் படி சனிக்கிழமை தலைக்கு குளிப்பது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications